‘சுவற்றில் புதைக்கப்பட்ட குழந்தை’…. போலீஸ் விசாரணையில்…. வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்….!!

அமெரிக்காவில் உள்ள பென்சில்வேனியாவைச் சேர்ந்த 25 வயதான கைலி வில்ட் தனது காதலரான ஆலன் ஹோலிஸ் மற்றும் 5 மாத குழந்தை உட்பட மொத்தம் நான்கு பிள்ளைகளுடன் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் தான் அதே பகுதியில் உள்ள வேறொரு வீட்டிற்கு குடும்பத்துடன் குடிபெயர்ந்துள்ளார். இதனை அடுத்து கடந்த வாரம் CYS என்ற மாநில குழந்தைகள் மற்றும் இளைஞர் சேவைகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் கைலியிடம் குழந்தை எங்கே என்று விசாரித்துள்ளனர்.

அதற்கு அவர், குழந்தை வட கரோலினாவில் வேறு ஒருவரால் பராமரிக்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளார். அதாவது குழந்தை பிறக்கும் போதே THC என்னும் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் CYS அமைப்பினர் அக்குழந்தையை பல மாதங்களாக கவனித்து வருகின்றனர். அது போன்று ஒரு முறை விசாரிக்கும் பொழுது அவர்களுக்கு சந்தேகம் எழுப்பியுள்ளது.

மேலும் அவர்கள் விசாரணை மேற்கொண்ட போது கைலி தனது 5 மாத குழந்தை பிப்ரவரியில் திடீரென நோய்வாய்ப்பட்டு இறந்து விட்டது என அதிர்ச்சிகரமான தகவலைத் தெரிவித்துள்ளார். இது குறித்து போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டு மீண்டும் அவர்கள் வந்து விசாரணையை மேற்கொண்டனர். அப்பொழுது அவர்களிடம் கைலி கூறியதாவது ” எனது குழந்தை இறந்த பிறகு மிகவும் பதற்றமடைந்தோம். இதனை அடுத்து வேறொரு வீட்டிற்கு குடிபெயர்ந்தோம்.

மேலும் இறுதி சடங்கிற்கு போதிய பணம் இல்லாததால் குழந்தையை பிளாஸ்டிக் கவரில் சுற்றி ஒரு பெட்டிக்குள் வைத்து வீட்டின் சுவற்றில் புதைத்துவிட்டோம். இதனை தொடர்ந்து சுவற்றின் மீது ஓவியத்தை மாற்றிவிட்டோம்” என்று கூறியுள்ளார். குறிப்பாக கைலி தனது காதலன் மற்றும் 3 குழந்தைகளுடன் 8 மாதங்களாக அந்த வீட்டிலேயே வாழ்ந்து வந்துள்ளார். தற்பொழுது குழந்தையின் சடலம் மீட்கப்பட்டு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மேலும் குழந்தை இறந்ததற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக குழந்தையின் மரணத்தை மறைத்தது, சடலத்தை துஷ்பிரயோகம் செய்தது, நீதிக்கு எதிராக செயல்பட்டது, பொதுநல குற்றம் போன்ற பல குற்றச்சாட்டுகள் கைலி மீது சுமத்தப்பட்டுள்ளது. மேலும் குழந்தையின் தந்தையான ஆலன் ஹோலிஸ் மீது சட்டம் மற்றும் பிற அரசு நடவடிக்கைகளை தடுத்தல் போன்ற குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

Contact Us