‘மக்களுக்காக சேவை புரிந்தவர்’…. புற்றுநோய் ஆராய்ச்சி மைய இயக்குனர்…. மரியாதை செலுத்திய கூகுள் நிறுவனம்….!!

 

இந்திய புற்றுநோய் ஆராய்ச்சி மையத்தின் முன்னாள் இயக்குனராக டாக்டர் கமல் ரணதிவே பணியாற்றினார். இவர் புற்றுநோய் குறித்து ஆராய்ச்சி மேற்கொண்டது, அறிவியல் மற்றும் கல்வியின் மூலமாக சமத்துவமான சமுதாயத்தை நிறுவுவதற்கான பணிகளை செய்தது போன்றவற்றால் இந்திய மக்களிடையே மிகவும் புகழ்ப்பெற்றார்

மேலும் இவர் உயிரணு உயிரியலில் மருத்துவ பட்டம் பெற்றார். அதிலும் இவரின் ஆராய்ச்சி புற்றுநோய் சிகிச்சையில் பெரிதும் உதவியாக இருக்கிறது. குறிப்பாக மார்பக புற்றுநோய்- மரபுவழி அதுபோன்று புற்றுநோய் மற்றும் வைரஸ்களுக்கும் இடையே நெருங்கிய தொடர்பு இருப்பதாக கண்டுபிடித்தார்.

மேலும் மருத்துவம் பயின்று நமது சமூகத்திற்கு சேவையாற்ற வேண்டும் என்று இந்திய மாணவர்களை தொடர்ந்து ஊக்குவித்தார். இதனை தொடர்ந்து அவர்களையும் மக்களுக்காக சேவை செய்ய வைத்தார். இவர் 1917 ஆம் ஆண்டு பூனாவில் பிறந்தார். அவருக்கு நேற்றுடன் 104 வயது பூர்த்தி அடைந்தது. இதற்காக கூகுள் நிறுவனம் கவன ஈர்ப்பு சித்திரத்தை நேற்று வெளியிட்டு அவருக்கு மரியாதை செய்தது.

Contact Us