குளிக்கும்போது டவல் எடுத்து கொடுக்க தாமதம் -மண்வெட்டியால் அடித்து மனைவி கொலை

குளிக்கும்போது டவல் எடுத்துக்கொண்டு வந்து கொடுப்பதற்கு தாமதப்படுத்த மனைவியே மண்வெட்டியால் வெட்டி படுகொலை செய்துள்ளார் கணவன். இந்த அதிர்ச்சி சம்பவம் மத்திய பிரதேச மாநிலம் பாலகாட் மாவட்டத்திற்கு உட்பட்ட கிர்னாபூர் கிராமத்தில் நடந்துள்ளது.

கிர்னாபூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜ்குமார். இவரது மனைவி புஷ்பா பாய். ராஜ்குமார் நேற்று குளித்துக் கொண்டிருக்கும் போது தனது மனைவியிடம் டவல் எடுத்து வந்து தரும்படி கேட்டிருக்கிறார். அப்போது பாத்திரங்கள் கழுவிக் கொண்டிருந்த புஷ்பா பாய், ‘’ நான் பாத்திரம் கழுவி கொண்டு இருக்கின்றேன். கொஞ்சம் வெயிட் பண்ணுங்க’’ என்று சொல்லியிருக்கிறார்.

குளித்து முடித்துவிட்ட பின்னரும் டவல் வராததால் ராஜ்குமாருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தி இருக்கிறது. டவல் எடுத்துக் கொடுத்துவிட்டு பாத்திரம் கழுவ வேண்டியதானே என்று ஆத்திரமடைந்த இருக்கிறார்.

பாத்திரம் கழுவி விட்டு வந்து விடுகிறேன் என்று மீண்டும் சொல்லியிருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த ராஜ்குமார் குளித்து முடித்ததும் ஈரத்துடனேயே சென்று மண்வெட்டியை எடுத்துக்கொண்டு ஓடிப்போய் மனைவியின் தலையில் பலமாக அடித்திருக்கிறார். இதை பார்த்து பதறிய மகள் ஓடிவந்து தடுக்க கொண்டிருக்கிறார். அவரை விரட்டி விட்டு மீண்டும் கொடூரமாக புஷ்பாவின் தலையில் ஓங்கி அடித்திருக்கிறார். இதில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்திருக்கிறார் புஷ்பாபாய்.

பின்னர் அக்கம்பக்கத்தினர் கொடுத்த தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து புஷ்பாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கணவன் ராஜ்குமார் தான் செய்த கொலையை ஒப்புக் கொண்டதால் அவரை கைது செய்து அழைத்துச் சென்றனர்.

Contact Us