வீட்டில் கஞ்சா தோட்டம்… இலைகள் மொத்தம் 10 கிலோ… திருப்பத்தூர் வாலிபர் கைது

திருப்பத்தூர் அருகே வீட்டில் கஞ்சா செடி வளர்த்த இளைஞரை கைது செய்து 10கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த பழைய அத்திகுப்பம் பகுதியில் வசித்து வரும் முனிராஜ் மகன் உத்திரகுமார் (25). இவர் தன்னுடைய வீட்டின் பின்புறத்தில் உள்ள இடத்தில் யாருக்கும் தெரியாமல் கஞ்சா செடி வளர்த்து வந்துள்ளார்.

இதனை அறிந்த ஊர் பொதுமக்கள் திருப்பத்தூர் கிராமிய காவல் துணை காவல் ஆய்வாளர் அகிலனுக்கு ரகசிய தகவல் கொடுத்துள்ளனர். அதனைத் தொடர்ந்து காவல் உதவி ஆய்வாளர் அகிலன் இரவோடு இரவாக உத்திரகுமார் வீட்டிற்கு சென்று பின்புறத்தில் இருந்த கஞ்சா செடிகளை வெட்டி காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்றனர்.

அது மட்டுமின்றி வெட்டி எடுத்துச் சென்ற மரத்திலுள்ள கஞ்சா இலைகள் 10 கிலோ மதிப்பு என காவல்துறை வட்டாரத்தில் தெரிவித்தனர்.

மேலும், உத்திரகுமார் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வாலிபர் வீட்டின் பின்புறத்தில் கஞ்சா மரம் வளர்த்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Contact Us