கொதிக்கும் சூப்பை மனேஜர் முகத்தில் வீசிய பெண் – பொலிசார் தேடி வருகிறார்கள் !

மெக்சிக்கன் உணவகம் ஒன்றில், ஒரு பெண் சூப் ஒன்றை ஆடர் செய்துள்ளார். அவரது சூப் கொண்டுவரப்பட்டது. அதில் பிளாஸ்டிக் போன்ற பொருள் ஒன்று இருப்பதாக முறைப்பாடு செய்ய அவர் சென்றவேளை. குறித்த உணவகத்தின் மனேஜர், முழு காசையும் திருப்பி தருவதாக கூறினார். ஆனால் அந்தப் பெண் கொதிக்கும் சூப்பை அப்படியே மனேஜர் முகத்தில் வீசி விட்டு அவசரமாக அங்கிருந்து வெளியேறி விட்டார்கள். இதனால் மனேஜர் எரி காயங்களுக்கு உள்ளானதோடு, கண் எரிச்சல் போன்ற உபாதைக்கும் ஆளாகியுள்ளார். CCTV கமராவில் பதிவான இந்த காட்சிகளை ஆதாரமாக வைத்து பொலிசார் அந்த 2 பெண்களையும் தேடி வருகிறார்கள். கீழே வீடியோ இணைப்பு.

Contact Us