யாழில் பிரபல வைத்தியரின் உயர்தரம் படிக்கும் மகளுடன் 16 வயது மாணவன் உறவு- கையும் களவுமாக பிடித்து கொலை வெறி தாக்குதல்..

 

யாழ்பாணம் கெட்டுக் கிடக்கும் மாதிரி, இலங்கைத் தீவில் எந்த மாவட்டமும் கெட்டுப் போகவில்லை… இது தான் தரவு…வாருங்கள் என்ன நடந்து என்று பார்கலாம். யாழில் தனது மகளுடன் உறவில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 16 வயதான பிரபல பாடசாலையில் கற்கும் மாணவனான சிறுவனை, படுக்கையறையில் வைத்து கையும் மெய்யுமாகப் பிடித்த பிரபல வைத்தியர் அச் சிறுவன் மீது கொலை வெறித் தாக்குதல் நடாத்தியுள்ளதாகத் தெரியவருகின்றது. குறித்த சிறுவன் தற்போது தனியார் வைத்தியசாலையில் காயங்களுடன் அனுமதிக்கப்பட்டுள்ளான். இச் சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. சிறுவனும் அரச அதிகாரி ஒருவரின் மகனாவான். குறித்த சிறுவனும் வைத்தியரின் 18 வயதான மகளும் சதுரங்க விளையாட்டுக்காக பெண் பயிற்சியாளர் ஒருவரிடம் சென்று பயிற்சி பெறுபவர்கள் எனத் தெரியவருகின்றது. இதன் மூலமே இருவரும் அறிமுகமாகி அதன் பின்னர் சதுரங்க விளையாட்டுக்களின் ஒன்லைனில் இருவரும் விளையாடி நட்பாகியுள்ளார்கள். அதன் பின்னர் வைத்தியரின் மகளின் வீட்டுக்கு குறித்த சிறுவன் சதுரங்க விளையாட்டுத் தொடர்பாக சில தடவைகள் வைத்தியர் மற்றும் வைத்தியரின் மனைவி வீட்டில் இருக்கும் போது சென்று வந்துள்ளான். இவ்வாறான நிலையில் அரச ஊழியராக உள்ள வைத்தியரின் மனைவியும் , வைத்தியரும் வீட்டில் இல்லாத நேரங்களில் மகளிடம் யாரோ ஒருவன் வீட்டுக்கு வந்து போவதாக வைத்தியருக்கு அயலவர் ஒருவர் கூறியுள்ளார்.

இது தொடர்பாக மகளிடம் வைத்தியர் விசாரணை நடாத்திய போதும் மகள் அவ்வாறு எதுவும் நடக்கவில்லை என கூறியதாகத் தெரியவருகின்றது. இதன் பின்னர் வைத்தியரின் வீட்டின் பின் காணியூடாக யாரோ ஒருவன் வீட்டுக்குள் நுழைவதாக அயலவர் கூறிய போது வைத்தியர் தனது காரில் வீட்டிற்கு வந்து உள்ளே புகுந்துள்ளார். இதன் பின்னரே சிறுவன் மற்றும் மகளும் நிர்வாணநிலையில் வைத்தியரிடம் அகப்பட்டுள்ளனர். வைத்தியர் உள்ளே நுழைந்த போது மகள் கதவைத் தாளிட்டுவிட்டு திறக்காது இருந்ததாகவும் தெரியவருகின்றது. வைத்தியர் கதவை உடைத்தே உள்ளே நுழைந்துள்ளார். அதன் பின்னரே சிறுவன் மீது தாக்குதல் நடாத்தியுள்ளார்.

இச் சம்பவம் தொடர்பாக பொலிசாரிடம் சிறுவனின் பெற்றோர் முறையிட்டுள்ளதாகவும் வைத்தியரும் தனித்திருந்த தனது மகளை சிறுவன் வல்லுறவுக்குள்ளாக்கியதாக முறைப்பாட்டை பதிவு செய்துள்ளதாகவும் பொலிஸ் தரப்பிலிருந்து தகவல்கள் கசிந்துள்ளன. இதே வேளை இரு தரப்பினரையும் சமாதானமாக்கி நீதிமன்றம்வரை செல்லாது பொலிசாருடன் விடயத்தை முடித்துக் கொள்வதற்கு வைத்தியரின் நண்பரான பிரபல வர்த்தகர் ஒருவர் முயன்று வருவதாகவும் பொலிசார் தரப்பிலிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

Contact Us