வெடித்து சிதறிய லாரி…. 100-க்கும் மேற்பட்டோருக்கு நடந்த விபரீதம்…. பிரபல நாட்டில் சோகம்….!!

 

மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோன் தலைநகர் ஃப்ரீடௌனின் புகர்ப் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு சென்று கொண்டிருந்த பெட்ரோல் லாரி மீது பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இதனையடுத்து லாரியில் இருந்து கசிந்த பெட்ரோலை சேகரிப்பதற்காக அந்தப் பகுதியில் உள்ள பெரும்பாலானவர்கள் அங்கு கூடினர். அப்போது திடீரென்று லாரி தீப்பிடித்து வெடித்து சிதறியது. இதனால் சம்பவத்தில் 100-க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர். இவ்வாறு உயிரிழந்தவர்களுக்கு நாட்டில் 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் சவப்பெட்டியில் வைக்கப்பட்டு ஒரே இடத்தில் அருகருகே புதைக்கப்பட்டது. அப்போது மயானத்தில் உறவினர்கள் மற்றும் தொழிலாளர்கள் உடல்களை அடக்கம் செய்ய பாதுகாப்பு உடைகளை அணிந்து இருந்தனர். இதில் அங்கு நின்ற பலர் இறந்தவர்களின் உடல்களை பார்த்து கதறி அழுதனர். இதுகுறித்து நாட்டின் ஜனாதிபதி ஜூலியஸ் பயோ கூறியபோது “இந்த சம்பவத்தில் என்ன நடந்தது என்பது குறித்து விசாரிக்கப்படும். இதுபோன்ற பேரழிவுகள் மீண்டும் நிகழாமல் தடுக்க நாம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்,

Contact Us