‘அடடே இவருக்கா கொடுத்துருக்காங்க’…. லண்டனில் விருது பெற்ற…. குக் வித் கோமாளி நடுவர்….!!

லண்டனில் உலகளாவிய உணவு, விருந்தோம்பல், சுற்றுலா சாதனைகள் 2021 ஆம் ஆண்டிற்கான விருது வழங்கும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் பிரபல இந்திய சமையல் கலைஞரான செஃப் தாமு அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக சமையல் துறையில் நல்ல அனுபவம் வாய்ந்த ஒருவருக்கு வழங்கப்படும் முதல் விருதாகும். மேலும் இது உலக தமிழ் அமைப்பால் உருவாக்கப்பட்டது.

இந்த விருது வழங்கும் நிகழ்வானது பிரித்தானியா நாடாளுமன்றத்தில் உள்ள ஹவுஸ் ஆஃப் காமன்ஸில் நடைபெற்றது. இது குறித்து சமூக வலைத்தளத்தில் செஃப் தாமு பதிவிட்டுள்ளார். அதில் ‘லண்டனில் விருது பெற்றதை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறேன். எனது பயணத்தில் என்னுடன் இருந்த அனைவருக்கும் நன்றி’ என பதிவிட்டுள்ளார். குறிப்பாக உணவு வழங்கல் துறையில் செஃப் தாமு அவர்கள் 40 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் வாய்ந்தவர்.

Contact Us