பிரிட்டனில் இந்த பிட் புல் நாய் 10 வயது சிறுவனை கடித்து குதறியே கொன்றது- உரிமையாளர் கைது !

அமெரிக்க பிட் புல் இனத்தை சேர்ந்த இந்த நாயின் பெயர், “பீஸ்ட்” அப்படி என்றால் ராட்சசன் என்று அர்த்தம். இதனை வைத்திருக்க பயந்து, சுமார் 2 வாரங்களுக்கு முன்னர் தான் அதன் முன் நாள் உரிமையாளர் நாயை ஒன்லைனில் விற்றுள்ளார். நாயை வாங்கிய நபர், அதனை வெளியே கொண்டு சென்றவேளை, பிரித்தானியாவின் வேல்ஸ் பகுதியில் அது திடீரென 10 வயது சிறுவனை நோக்கி பாய்ந்து சென்றது. நாய் உரிமையாளரால் அதனை கட்டுப்படுத்த முடியவில்லை. சிறுவனின் தொண்டை பகுதியை கவ்விய நாய், கடித்து குதறியதில், சிறுவன் சம்பவ இடத்திலேயே பலியாகி விட்டான். விரைந்து வந்த பொலிசார் குறித்த நாயை பிடிக்க முயன்றவேளை. அது பொலிசாரை தாக்க ஆரம்பித்த காரணத்தால் அதனை பொலிசார் சுட்டுக் கொன்றுவிட்டார்கள் என்று அதிர்வு இணையம் மேலும் அறிகிறது.

இது போன்ற படு பயங்கராமான பிட் புல் வகை நாய்களை வளர்க்க பிரித்தானியாவில் தடை உள்ளது. ஆனால் அப்படி இருந்தும் சிலர் பிட் புல் நாய்களை வளர்த்து வருகிறார்கள். இன் நிலையில் நாயின் உரிமையாளரை பொலிசார் கைது செய்துள்ளார்கள். நாய் கொலை செய்திருந்தாலும். இந்த கொலை நடக்க ஏதுவாக இருந்த காரணத்திற்காக அதன் உரிமையாளர் கைதாகியுள்ளார். அவருக்கு பல ஆண்டு சிறை தண்டனை கிடைக்க வாய்ப்புகள் உள்ளது.

Contact Us