சின்ன ட்ரோன்: ஷட்டல் காக் பொருத்திய 2 ஷெல் குண்டு: பிரதமர் மாளிகையை எப்படி தாக்கினார்கள் ?

கடந்த ஞாயிறு அன்று, ஈராக் நாட்டு பிரதமர் முஸ்தபா வீட்டை தாக்கி, அவரைக் கொல்ல சிறிய ஆளில்லா விமானம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. கொல்ல முயற்ச்சி என்ற செய்திகள் பரவலாக ஊடகங்களில் வெளியாகி இருந்தது. ஆனால் எப்படி இந்த கொலை முயற்சி துல்லியமாக நடைபெற இருந்தது ? அதில் இருந்து பிரதமர் எப்படி தப்பினார் ? எப்படி குண்டை போட கொலையாளிகள் திட்டம் தீட்டி இருந்தார்கள் ? இவை அனைத்துமே பெரும் அதிர்ச்சி தரும் தகவலாக உள்ளது. அதிர்வின் அலசல் பக்கம் போகலாம் வாருங்கள்…

மில்லியன் கணக்கான டாலர்களை செலவு செய்து, ஆளில்லா விமானங்களை தயாரித்து வருகிறது வல்லரசு நாடுகள். ஆனால் வெறும் $200 அமெரிக்க டாலரில் சிறிய ரக ஆளில்லா விமானத்தை வாங்கி, அதனை பெரும் கொலை ஆயுதமாக மாற்றியுள்ளார்கள் கொலையாளிகள். அது போக இந்த கொலை திட்டத்திற்கு பின்னால் ஈரான் இருப்பதாக கூறப்படுகிறது. ஈரான் நாட்டில் இருந்து ஒரு ஆளில்லா விமானம்,  ஈராக் நோக்கி வந்தால். அமெரிக்கா கொடுத்துள்ள ராடரில் அது அகப்பட்டு விடும். ஆனால் இந்த $200 டாலர் ஆளில்லா விமானத்தை, ஈராக்கில் இருந்தே இயக்க முடியும்.

ஈராக் பிரதமர் தனது வீட்டில் இருந்தவேளை. இந்த சிறிய ஆளில்லா விமானம் அவர் வீட்டின் மேல்,  சற்று அருகாமையில்  பறந்து வந்துள்ளது. இந்த விமானத்தில் 2 ஷெல் (சிறிய ஏவுகணை) பொருத்தப்பட்டு இருந்துள்ளது. அதுவும் உள்ளூர் தயாரிப்பு தான். மேலும் சொல்லப் போனால், ஷெல்லின் பின் புறத்தில் உள்ள இருப்பு சக்கரத்திற்கு பதிலாக வெறும் ஷட்டல் காக்(பட் மீன்டன் விளையாடும்) பொருத்தி உள்ளார்கள். குண்டின் எடையை குறைக்கவும். அது நேராக பாதை மாறாமல் அப்படியே கீழே சென்று தாக்க ஏதுவாகவும் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு சிறிய கமரா விமானத்தில் பொருத்தப்பட்டு இருந்துள்ளது. பிரதமர் வீட்டில் இருந்து 50 மீட்டர் தூரத்தில், எங்கோ ஒரு மறைவிடத்தில் இருந்து,  இதனை இயக்கி உள்ளார்கள். கமராவில் வீட்டை சரியாக பார்த்து, வீட்டிற்கு மேலே வந்த உடனே அந்த 2 குண்டுகளையும் விமானம் விடுவித்து இருக்கும். அது அப்படியே வந்து விழுந்து வெடித்தும் இருக்கும். ஆனால்…

இந்த ஆளில்லா விமானத்தை முன்னரே கவனித்த பாதுகாவலர்கள், அமெரிக்கா ஏற்கனவே கொடுத்த ஆளில்லா விமான சிக்னலை ஜேம் செய்யும்(செயல் இழக்கச் செய்யும்) கருவியை இயக்கி உள்ளார்கள், இதனால் குறித்த விமானத்திற்கு சிக்னல் கிடைக்கவில்லை. இதனை அடுத்து அந்த விமானத்தை தமது கட்டுப் பாட்டில் கொண்டு வந்த படையினர், அதனை மெதுவாக தரை இறக்கி உள்ளார்கள். படம் இணைப்பு.

Contact Us