அமெரிக்காவுக்கு கில்மா கொடுத்த ஆப்கான்: 3 லட்சம் படை இருக்கு என்று கூறி ஏமாற்றி சம்பள காசை எப்பம் விட்ட அதிகாரிகள்..

அமெரிக்க படைகள் பல ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானை, தமது கட்டுப் பாட்டில் வைத்திருந்தார்கள். ஆனால் தம்மால் அங்கே தொடர்ந்தும் தரித்து நிற்க்க முடியாது என்று தெரிந்து கொண்ட அமெரிக்க படைகள். ஒரு கட்டத்தில் ஆப்கான் நாட்டில் இருந்து விலகவேண்டிய சூழல் ஏற்படும் என்று முன்னரே அவர்களுக்கு தெரிந்து இருந்தது. இதனால் ஆப்கான் நாட்டில் ஒரு பெரும் படை ஒன்றை கட்டி எழுப்ப அமெரிக்கா மில்லியன் கணக்கில் டாலரை செலவு செய்தது. ஒரு நிலையான ஆப்கான் ராணுவத்தை கட்டி எழுப்பினால், தலிபான்கள் அல்லது அல்-கைடா போன்ற தீவிரவாதிகள் மீண்டும் ஆப்கானை கைப்பற்ற முடியாது என்று அமெரிக்கா நினைத்தது. ஆனால் ஆப்கானில் உள்ள 99% விகிதமான அரசியல் வாதிகளும் பெரும் மோசடிக் காரர்கள் என்பதனை தான்,  அமெரிக்கா கடைசி நேரம் வரை புரிந்து கொள்ளவே இல்லை. Source: The Taliban easily conquered Afghanistan because corrupt officials INVENTED ‘ghost soldiers’ so they could pocket their wages – and most of their 300,000-strong army did not EXIST:

ஆப்கான் அதிகாரிகள் பெரும் படை ஒன்றை கட்டி எழுப்புவதாக கூறி கூறி, அவர்களுக்கு சம்பள காசு கொடுக்க வேண்டும் என்று சொல்லி,  மாதம் தோறும் கணிசமான அளவு தொகையை பெற்று அதனை கையாடல் செய்து வந்துள்ளார்கள். வெறும் 10,000 பேர் கூட ஆப்கான் ராணுவத்தில் இல்லை. ஆனால் 3 லட்சம் பேரை சேர்த்து விட்டதாக கூறி. அவர்களுக்கான சம்பளத்தை வாங்கி தமது பாக்கெட்டில் போட்டு வந்துள்ளார்கள் அதிகாரிகள். ஆனால் உண்மை நிலையை அமெரிக்கா கடைசி வரை உணரவே இல்லையாம். இது தான் பெரும் வியப்பு. அமெரிக்க படைகள், ஆப்கான் நாட்டில் இருந்து வெளியேற.. தலிபான்கள் பல இடங்களை கைப்பற்ற ஆரம்பித்த வேளை,  அமெரிக்கா பெரும் அதிர்ச்சியடைந்தது. காரணம்… ஆப்கான் ராணுவம் என்ன செய்கிறது என்று நினைத்து தான்.

ஆனால் இல்லாத ராணுவம் ஒன்று எங்கே எப்படி தலிபான்களை எதிர்த்துப் போராடும் ? கடைசியாக தான் அமெரிக்க இந்த சுத்துமாத்தை புரிந்து கொண்டது. இதனை அடுத்து  அமெரிக்க CIA தலைவர், தலிபான்களை சந்தித்து ஒரு டீலை பேசி, பாதுகாப்பாக தமது படைகள் வெளியேற ஏற்பாட்டை செய்து முடித்தார். தாம் ஆப்கான் அதிகாரிகளிடம் ஏமாந்த கதையை அமெரிக்கா வெளியே எப்படி சொல்லது ? ஆனால் சமீபத்தில் கசிந்த சில ஆவணங்களில் இந்த குறிப்புகள் உள்ளது. அதிர்வின் அலசல் பக்கத்திற்காக இந்த EXCLUSIVE செய்தி.

Contact Us