கனடாவில் தமிழ் பொலிஸ அதிகாரி பிடித்த இரண்டு 16 வயது குற்றவாளிகள்: 39 குற்றச் செயலில் ஈடுபட்டவர்கள்

கனடா டொரண்டோவில் உள்ள அஜெக்ஸ் என்னும் நகரில், இரவு நேரத்தில் 2 சிறுவர்கள் ஆயுதங்களோடு வீடு ஒன்றினுள் புகுந்துள்ளார்கள். வீட்டில் இருந்தவர்களை மிரட்டி சுமார் 5,000 டாலர் பெறுமதியான நகை பணத்தோடு அவர்கள் தப்பியோடிய நிலையில். குறித்த ஏரியாவையே கனடா பொலிசார் சுற்றிவளைத்து பெரும் தேடுதல் நடவடிக்கையில் இறங்கினார்கள். இந்த தேடுதல் நடவடிக்கையில், கனடாவில் பிறந்து வளர்ந்த 25 வயதாகும் ஈழத் தமிழ் பொலிஸ் அதிகாரியும் உள்ளடங்குகிறார். Source CBS: Two teens facing dozens of charges after Ajax home invasion:

பின்னர் ஆள் நடமாட்டம் அற்ற இடம் ஒன்றில் வைத்து, அந்த 2 சிறுவர்களும் கைது செய்யப்பட்ட நிலையில். அவர்களது கை ரேகை பிரதிகள் எடுக்கப்பட்டது. அதனை Data Baseல் போட்டவேளை, அவர்கள் மேலும் 39 குற்றச் செயல்களுக்காக தேடப்பட்டு வரும் நபர்கள் என்பது பொலிசாருக்கு தெரியவரவே அவர்கள் அதிர்ந்து போனார்கள். இந்த இரண்டு 16 வயதுச் சிறுவர்களும் இதுவரை 40 குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளார்கள் என்று பொலிசார் இன்று தெரிவித்துள்ளார்கள்.

Contact Us