பிக் பாஸ் வீட்டுக்குள் எழுந்த சண்டை…. தகாத வார்த்தையால் பேசிய போட்டியாளர்கள்

பிக் பாஸ் சீசன்5 நிகழ்ச்சியில் லட்சுரி பட்ஜெட் டாஸ்க் நடைபெற்றது. அப்போது போட்டியாளர்களின் பெயருடன் கொடுக்கப்பட்ட பொம்மைகளை மற்றவர்கள் தூக்கிக்கொண்டு கூடாரத்திற்குள் ஓடுவதன் மூலம் ஒருவர் மற்றவரை காப்பாற்ற முடியும்.

அந்த வகையில் அக்ஷரா, வருண் இருவரையும் தோற்கடிக்கும் எண்ணத்தில் நிரூப் செயல்பட்டுக் கொண்டிருந்தார். அப்போது வருண் மற்றும் நிரூப் இருவருக்கும் ஏற்பட்ட மோதலில் இருவரும் தகாத வார்த்தையால் திட்டிக் கொண்டுள்ளனர்.

இடையில் வந்த சிபியும் அக்ஷராவை பார்த்து கோபத்தில் கெட்ட வார்த்தையை பேசிவிட்டார். இவ்வாறு பிக்பாஸ் நிகழ்ச்சியில் இதுவரை எந்த சீசனிலும் இல்லாத அளவிற்கு அதிகமாக பீப் சவுண்ட் போடப்பட்டது. இதனால் வார இறுதியில் என்ன நடக்கபோகுமோ என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

Contact Us