திடீரென மாயமான இளம்பெண்…. ரத்தம் படிந்த மொபைல்…. பெரும் பரபரப்பு சம்பவம்…..!!!!

திங்கட்கிழமை அன்று Mayenne என்ற இடத்தில் 17 வயது பெண் ஜாக்கிங் செய்து கொண்டிருந்த போது மாயமாகியுள்ளார். அந்தப்பெண் வழக்கமான நேரத்திற்கு வீட்டிற்கு வராததால், அவருடைய தந்தை தன் மகளை தேடிச் சென்றுள்ளார். இந்நிலையில் அவருடைய கைபேசி மற்றும் ஐபிஎஸ் பொருத்தப்பட்ட வாட்ச் ஆகியவை மட்டும் ஓரிடத்தில் கிடப்பதை பார்த்துள்ளார்.

அப்போது அதில் ரத்தம் பட்டிருப்பதை கண்ட அந்தப் பெண்ணின் தந்தை உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளார். இதையடுத்து உடனடியாக 200 போலீசார், மோப்ப நாய்கள், ஆழ்கடல் நீச்சல் வீரர்கள் மற்றும் ஹெலிகாப்டர் உதவியுடன் பல்வேறு இடத்திலும், நதி ஒன்றிலும் தேடும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறார்கள்.

Contact Us