பிக் பாஸ் சீசன் 5 வெற்றியாளர் இவர் தான்…அடித்து கூறும் நமீதா மாரிமுத்து

பிக் பாஸ் சீசன் 5 தற்போது மிகவும் விறுவிறுப்பாக சென்றுக் கொண்டிருக்கிறது . இதில் வந்த முதல் வாரத்திலேயே நாமினேஷன் செய்யப்படாமலேயே சில தவிர்க்க முடியாத காரணத்தால் திருநங்கை நமீதா மாரிமுத்து போட்டியில் இருந்து வெளியேறினார். அவரைத் தொடர்ந்து மலேசியா மாடல் நாடியா சாங், பிரபல யூடியூபர் அபிஷேக் ராஜா, பாடகி சின்னப்பொண்ணு, மற்றும் மாடல் சுருதி ஆகியோர் இதுவரை போட்டியிலிருந்து மக்களின் தீர்ப்பால் வெளியேற்றப்பட்டனர்.

முதல்நபராக வீட்டிலிருந்து வெளியேறிய நமீதா மாரிமுத்து ரசிகர்களின் பல கேள்விக்கு ஆளானார். இதனால் அவர் சாமர்த்தியமாக ஒரு முடிவு செய்தார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கேள்வி பதில் என்னும் பகுதியினை தொடங்கினார். அதில் ரசிகர்கள் பலரும் பல கேள்விகளை கேட்டு அவரை ஒரு வழி ஆக்கி விட்டனர்.

ஆனால் எதற்கும் அசராமல் அவர் ரசிகர்களின் எல்லாக் கேள்விகளுக்கும் நிதானமாகவும், சாதுர்யமாகவும் பதில் அளித்துள்ளார். மேலும் இன்னொரு ரசிகர் இந்த சீசனின் டைட்டில் வின்னர் யாராக இருப்பார் என்று நினைக்கிறீர்கள் என்ற கேள்விக்கு ஆணித்தனமாக சிபி சந்திரன் அல்லது இசைவாணி எனத் தனது கருத்தை ஆழமாக பதிவிட்டுள்ளார் நமீதா மாரிமுத்து.

அதே வேளையில் மீண்டும் போட்டியில் கலந்து கொள்வீர்களா என்ற ரசிகர் ஒருவரின் கேள்விக்கு, நமீதா கலந்து கொள்ளலாம் அல்லது கலந்து கொள்ளாமலும் இருக்கலாம். பார்க்கலாம் என பொடி வைத்துப் பேசியுள்ளார். இவ்வாறு பிக்பாஸ் பற்றிய ரசிகர்களின் கேள்விக்கு மனம் திறந்து பதிலளித்துள்ளார் திருநங்கை நமீதா மாரிமுத்து.

Contact Us