இதற்கு பதிலடியாக…. போர் பயிற்சி தொடக்கம்…. பிரபல நாட்டில் வெளியான தகவல்….!!

பெய்ஜிங்: தைவான் அருகில் சீன பாதுகாப்பு படையினர் போர் பயிற்சியை தொடங்கியுள்ளனர். எனவே தங்களது எதிர்ப்பையும் மீறி அமெரிக்க நாடாளுமன்ற குழுவினர் தைவானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டதற்குப் பதிலடியாக இந்த போர் பயிற்சியை சீனா மேற்கொண்டு உள்ளதாக கூறப்படுகிறது.

இதில் தைவான் தனி நாடாக இயங்கி வந்தாலும் அந்தப் பகுதியை தங்களது மாகாணங்களில் ஒன்றாக சீனா கருதி வருகிறது. ஆகவே தங்களை மீறி தைவானுடன் பிற நாடுகள் தூதரக உறவு கொள்வதற்கு சீனா கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. எனினும் தைவானுடன் அதிகாரபூர்வமற்ற தூதரக மற்றும் ராணுவ நட்புறவை அமெரிக்கா பேணி வருகிறது.

Contact Us