பிள்ளை வளர்ப்பில் கோட்டை விடுகிறார்களா பிரான்ஸ் தமிழ் பெற்றோர் ! நடந்த சம்பவம்-1

வீட்டில் இலங்கையராகவும் வெளியில் தான் வாழும் நாட்டவராகவும் வாழும் அழுத்தம் அவர்களை தனிமைக்கும் தற்கொலை மனநிலைக்கும் தள்ளுகிறது. இந்த மனநிலை புலம் பெயர் குழந்தைகளிடம் அதிகமாக உள்ளன.

காரணம் அவர்களுக்கு வீடுகளில் உள்ள அழுத்தம். அதிலிருந்து மீண்டு விட்டால் அவர்கள் தம் எண்ணம் போல வாழ்கையை அமைத்துக் கொள்ள முடியும். சில பெற்றோர்களால் புலத்து குழந்தைகள் தவறாக செயல்படுகிறார்களே ஒழிய பொதுவாக புலத்து குழந்தைகள் மிக நல்லவர்களாக இருப்பார்கள்.

இலங்கை போன்ற நாடுகளுக்கு போனால் இவர்களை ஏமாற்றுவது வெகு சுலபம் என நான் பலரிடம் சொன்னதுண்டு. காரணம் அவர்கள் வாழும் நாடுகளில் அவர்களாக ஏமாறவோ அல்லது யாரையும் ஏமாற்றவோ தேவையில்லை.

அதுவே குழந்தைகளை பெற்றோரிடமிருந்து அந்நியப்படுத்துகிறது. புலத்தில் உள்ள பெற்றோரது தேவைகள் வேறாகவும் குழந்தைகளது தேவைகள் வேறாகவும் இருக்கின்றன.

இந்த முரண்பாட்டை உணர்ந்து நடந்து கொள்வோர் சிலரே. அதிகமானோர் முரண்பாட்டை வளர்ப்பவர்களாக இருப்பார்கள்.

Contact Us