கனடாவில் இளம் தாயார் தொடர்பான வழக்கில் திருப்பம்: டி.என்.ஏ சோதனையில் அம்பலமான உண்மை

ஒன்ராறியோவின் விண்ட்சரில் இளம் தாயார் கொல்லப்பட்ட வழக்கில், முன்னெடுக்கப்பட்ட டி.என்.ஏ சோதனையில் முக்கிய தகவல் தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக டி.என்.ஏ சோதனையை முன்னெடுத்த உயிரியல் ஆய்வாளர் ஜெனிபர் மெக்லீன் விண்ட்சர் நீதிமன்றத்தில் தமது அறிக்கையை தாக்கல் செய்துள்ளார்.

அதில், சீரழித்து கொல்லப்பட்டதாக கண்டறியப்பட்டுள்ள 31 வயது Autumn Taggart என்பவரின் டி.என்.ஏ மாதிரிக்கும், முதல் நிலை கொலை வழக்கு விசாரணையை எதிர்கொள்ளும் 31 வயதான ஜிதேஷ் போகல் என்பவரது டி.என்.ஏ மாதிரிக்கும் பெருமளவு ஒத்துப்போவதாகவும்,

சம்பவத்தன்று Autumn Taggart உடம்பிலும், உள்ளுறுப்புகளில் இருந்தும் சேகரிக்கப்பட்ட மாதிரிகளின் அடிப்படையில் தாம் இதை உறுதி செய்துள்ளதாகவும் மெக்லீன் நீதிமன்றத்தில் குறிப்பிட்டுள்ளார்.

கொல்லப்பட்ட தாயாரின் உடம்பில் காணப்பட்ட டி.என்.ஏ மாதிரிககளில் பலவற்றில் இருந்து போதிய ஆய்வுகளை முன்னெடுக்க முடியாமல் போனதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மட்டுமின்றி, டி.என்.ஏ மாதிரிகள் சில சந்தர்ப்பங்களில் மாறுவதற்கும் வாய்ப்பிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இருப்பினும் தம்மிடம் ஒப்படைக்கப்பட்ட அல்லது தம்மால் சேகரிக்கப்பட்ட டி.என்.ஏ மாதிரிகளை ஆய்வுக்கு எடுத்துக் கொண்டதில், அது இன்னொருவரின் டி.என்.ஏ அல்ல போகலினுடையது என்பதற்கு 8.6 மில்லியன் மடங்கு வாய்ப்புகள் அதிகம் என தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், ஒரு குழந்தையின் தாயாரான Autumn Taggart கொலை வழக்கு மேலும் இறுக்கமடைந்துள்ளது.

Contact Us