“அடடா ! அழகா இருந்தா அது அதிகாரியா இருந்தாலும் …”பெண் ராணுவ அதிகாரிக்கு நடந்த வன் கொடுமை

பணியிடத்தில் பெண்களுக்கு நடக்கும் பாலியல் தொல்லைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது .அது சாதாரண பெண் ஊழியர் முதல் பெரிய அதிகாரிகள் வரை தொடர்ந்து வருகிறது .இந்த புகாரில் சமீபத்தில் போலீஸ் அதிகாரிகள் கூட சிக்கியுள்ளார்கள் .இந்த புகாரை தடுக்க எவ்வளவு சட்டங்கள் இயற்றினாலும் அதை தடுக்க முடியவில்லை

இந்நிலையில் பஞ்சாபில் உள்ள அமிர்தசரசில் உள்ள ஒரு ராணுவ தளத்தில், பெண் அதிகாரி ஒருவர் பணி புரிந்து வந்தார் . அவருக்கு அங்கு பணிபுரியும் சக ஊழியர்களால் பாலியல் தொல்லைகள் கொடுக்கப்பட்டு உள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன.

இந்த பாலியல் புகார் பற்றி மூத்த ராணுவ அதிகாரி ஒருவர் கூறியதாவது:பஞ்சாபில் உள்ள ராணுவ தளத்தில், பணியில் உள்ள பெண் ராணுவ அதிகாரி ஒருவருக்கு பாலியல் தொந்தரவு தரப்பட்டு உள்ளது. இது தொடர்பாக புகார்களும் வந்துள்ளன. இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சட்டப்படி விசாரணை நடத்தப்பட்டு, குற்றம் இழைத்தவர்களுக்கு தண்டனை வழங்கப்படும்.

பெண் ராணுவ அதிகாரி களுக்கு பாதுகாப்பான பணி சூழலை உருவாக்கி கொடுப்பதில் இந்திய ராணுவம் உறுதியாக உள்ளது. ராணுவத்தில், பெண் அதிகாரிகளுக்கு எதிராக இழைக்கப்படும் குற்றங்களை, இந்திய ராணுவம் ஒருபோதும் சகித்துக் கொள்ளாது.இவ்வாறு அவர் கூறினார்.

Contact Us