நொங்கு தருவதாக 9வயது சிறுமியை அழைத்துச்சென்று..பின்னர் கொன்ற கொடூரனுக்கு நேர்ந்த கதி

நொங்கு வெட்டி தருவதாக ஆசைவார்த்தை கூறி அழைத்துச் சென்று 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து பின்னர் தான் மாட்டிக் கொள்ளக் கூடாது என்பதற்காக சிறுமியின் கழுத்தை நெரித்தும், கல்லால் தாக்கியும் கொடூரமாக கொலை செய்த கொடூரன் சிறையில் அடைக்கப்பட்டு அங்கேயே கழிவறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறா.ர்

சேலம் மாவட்டத்தில் தாரமங்கலம் ஒன்றியம் தெசவிளக்கு ஊராட்சிக்கு உட்பட்ட மாட்டையாம்பட்டி பூவான் வளவு கிராமத்தைச் சேர்ந்தவர் மாதேஸ்வரன். இவரது மகன் தனபால். இருபது வயதே ஆன இந்த இளைஞரால் அந்த கிராமத்தில் உள்ள பெண்களுக்கு பல தொல்லைகள் ஏற்பட்டு வந்துள்ளன.

பெண்களுக்கு தொல்லை கொடுத்துவந்த தனபால் கடந்த மே மாதம் 1ஆம் தேதி என்று 9 வயது சிறுமியை நுங்கு வட்டி தருவதாக ஆசை வார்த்தை கூறி அழைத்து சென்றிருக்கிறார். அந்த சிறுமியும் நொங்கு சாப்பிடும் ஆசையில் தனபால் பின்னால் சென்றிருக்கிறார். யாரும் இல்லாத ஒரு பகுதிக்கு அழைத்துச் சென்ற தனபால், அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து இருக்கிறார்.

பின்னர் தான் போலீசில் மாட்டிக் கொள்வோம் என்கிற எண்ணத்தில் அந்த சிறுமியை கழுத்தை நெரித்து இருக்கிறார்.  பின்னர் கடுமையாக தாக்கி கொலை செய்திருக்கிறார்.

மகளை காணவில்லை என்று பெற்றோர் ஊர் முழுவதும் தேடிவிட்டு போலீசில் புகார் கொடுத்த போது தாரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.  விசாரணையில் இளைஞர் தனபால் சிக்கினார்.  அவரை சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.   தொடர்ந்து அவர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார்.

கடந்த 5 மாதங்களாக சிறையில் இருந்து வரும் தனபால் நேற்று மாலை மத்திய சிறையில் உள்ள கழிவறையில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.

தனபால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதை அடுத்து  சேலம் சிறைச்சாலை போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.  இந்த கொலை சம்பவம் தொடர்பாக சேலம் அஸ்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சிறைக்கு வெளியே இருந்த போது எந்நேரமும் தனபால்  கஞ்சா போதையில் இருந்ததாக சொல்லப்படுகிறது.  சிறைக்குள் கஞ்சா பிடிக்க முடியாத நிலை இருந்ததால் மன அழுத்தத்திற்கு ஆளாகி அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்றும்,  சிறையில் தனக்கு ஏற்பட்ட ஏதேனும் பிரச்சனையில்  மன வேதனையில் தற்கொலை செய்து கொண்டாரா என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Contact Us