“கழட்டி விட நெனச்சா கம்பி எண்ண வச்சிடுவேன்டா” -மிரட்டிய காதலியால் காதலனுக்கு நேர்ந்த கதி

மும்பையின் கண்டிவிலி பகுதியில் வசிக்கும் 58 வயதான லக்ஷ்மண் கோகரே தனது மகன் அங்கித் கோகரே சார்கோப்பில் உள்ள வீட்டில் வசித்து வந்தார் .அந்த அங்கித் ஒரு தனியார் தகவல் தொழில் நுட்ப நிறுவனத்தில் பணிபுரிகிறார் .இந்நிலையில் அவர் கடந்த நான்கு ஆண்டுகளாக அவரின் உறவுப்பெண்ணான பிரகதி ஜோரைக் காதலித்த வந்தார் .

இந்த காதல் விவகாரம் அந்த அங்கித்தின் தந்தைக்கு தெரியவந்தது.அதனால் அவர் அந்த பெண்ணை காதலிப்பதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தர் ,மேலும் அந்த பெண்ணுடன் இருக்கும் காதலை விடுத்து வேறு பெண்ணை திருமணம் செய்ய வற்புறுத்தினார் .அதனால் அந்த அங்கித் திடீரென்று அந்த பெண்ணை விட்டு விலக ஆரம் பித்தார் .இந்த காதலனின் செய்கையால் அந்த பெண் கடும் கோபமுற்று அந்த காதலன் அங்கித்தை மிரட்ட ஆரம்பித்தார் .தன்னை உடனே கல்யாணம் செய்து கொள்ள வில்லையன்றால் அவரை கற்ப்பழிப்பு புகார் கொடுத்து கம்பி எண்ண வைத்து விடுவதாக மிரட்டினார்.

இதனால் அந்த அங்கித் கடும் மன வேதனைக்குள்ளானார் .அதனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவரின் வீட்டில் அவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் .அதனால் அந்த அன்கித்தின் தந்தை அந்த பெண் மீது போலீசில் புகார் கொடுத்தார் .போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்

Contact Us