சீன உர கப்பலை நாட்டிற்குள் அனுமதிக்கப் போவதில்லை என மஹிந்தானந்தவினால் உறுதியளிக்க முடியுமா?

சீன உர கப்பலை நாட்டிற்குள் அனுமதிக்கப் போவதில்லை என்று, விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவிற்கு, நீதிமன்றில் உறுதியளிக்க முடியுமா? என எதிர்வரும் 8 ஆம் திகதி அறியப்படுத்துமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சுற்றாடலை பாதுகாப்பதற்கான கேந்திரம் உள்ளிட்ட தரப்பினர் தாக்கல் செய்த மனு ஆராய்வின் போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியர்கள் சோபித்த ராஜகருணா மற்றும் தம்மிக கனேபொல ஆகியோர் முன்னிலையில் குறித்த மனு ஆராயப்பட்டது.மனுவின் பிரதிவாதிகளாக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே, இராஜாங்க அமைச்சர் சசீந்திர ராஜபக்ஷ, விவசாய பணிப்பாளர் நாயகம், காவல்துறைமா அதிபர், சட்டமா அதிபர் உள்ளிட்டோர் பெயரிடப்பட்டுள்ளனர்.

Contact Us