‘உறவு வைத்துக்கொள்’… தொழிலதிபரை அடித்தே கொன்ற மனைவி… முதல் மனைவி கண்ணீர்

பெங்களூருவில் உள்ள கியாதனஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் சுவாமி ராஜ் (50). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவருக்கு சத்யகுமாரி (35) என்ற மனைவியும் இரண்டு பிள்ளைகளும் உள்ளனர். இந்நிலையில், கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு சுவாமி ராஜுக்கு நேத்ரா (37) என்ற பெண்ணுடன் திருமண உறவை மீறிய பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் திருமணம் செய்துகொள்ளாமல் குடும்பம் நடத்தி வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த ஞாயிற்று கிழமை நள்ளிரவில் நேத்ரா மதநாயக்கனஹள்ளி காவல் நிலையத்துக்கு சென்று, கணவர் சுவாமி ராஜை இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்துவிட்டேன் என்று கூறி சரணடைந்தார். நள்ளிரவில் கணவனை கொலை செய்துவிட்டதாக பெண் ஒருவர் காவல் நிலையத்துக்கு வந்த சம்பவம் ஒட்டுமொத்த போலீசாரை அதிர்ச்சியில் ஆழ்த்திய நிலையில், சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்தனர். அப்போது சுவாமி ராஜ் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடப்பதை போலீசார் உறுதி செய்தனர்.

தொடர்ந்து கொலை குறித்து நேத்ராவிடம் விசாரித்ததில், நானும் சுவாமிராஜும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்புதான் திருமணம் செய்துகொண்டோம். என்னை சுவாமி ராஜ் பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்தார். எங்களுடைய உறவினர் ஒருவர் என்னிடம் தகாத முறையில் நடந்து கொள்வதை கணவரிடம் கூறினேன். அப்போது அவர் அந்த உறவினருடன் உறவு வைத்துக்கொள்ளுமாறு தொந்தரவு செய்தார். அப்போது ஏற்பட்ட தகராறில் நான் கணவரை இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்துவிட்டேன் என இவ்வாறு நேத்ரா கூறினார்.

இதற்கு மத்தியில் சுவாமி ராஜின் முதல் மனைவி சத்யகுமாரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரில், என் கணவரும் நேத்ராவும் திருமணம் செய்துகொள்ளாமலேயே 6 ஆண்டுகளாக பழகி வந்தனர். என் கணவருக்கு அதிக சொத்து இருப்பதால் தனக்கு சரி சமமாக சொத்து வேண்டும் என நேத்ரா என் கணவரிடம் வலியுறுத்தி வந்தார். ஆனால், என் கணவர் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. அதன்பிறகுதான் சொத்துக்கு ஆசைப்பட்டு கணவன் மூலம் தாலி கட்டிக்கொண்டார். அதன் பின்னரும் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக என் கணவரை கொலை செய்துவிட்டு பொய்யான காரணத்தை நேத்ரா சொல்கிறார் என்றும் அவரை விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சத்ய குமாரி புகார் கொடுத்துள்ளார்.

தொழிலதிபரை இரண்டாவது மனைவி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Contact Us