செருப்பை கழட்டி அடிக்க சொன்ன ராஜு.. காரணம் கேட்டு அதிர்ந்து போன பிக்பாஸ் ரசிகர்கள்

 

பிக்பாஸ் 5 நிகழ்ச்சி நாற்பது நாட்களை கடந்து வெற்றிகரமாக நடந்து வருகிறது. இந்த வாரம் நீயும் பொம்மை நானும் பொம்மை என்ற டாஸ்க் முடிவு பெற்றது. அதில் ஐக்கி நிரூப்பிற்காக விளையாடி அவரை வெற்றி பெறச் செய்தார்.

தற்போது இன்றைக்கான மூன்றாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. இதில் போட்டியாளர்கள் அனைவரும் லிவிங் ஏரியாவில் ஒன்றாக அமர்ந்து உள்ளனர். பிக்பாஸ் அவர்களிடம் முகத்திற்கு நேராக கருத்துக்களை சொல்ல தைரியம் இல்லாமல் தனித்தன்மையை இழந்து நிற்கும் இரண்டு நபரை கூற வேண்டும் என்கிறார்.

இதற்கு முதலாவதாக வரும் பிரியங்கா, ராஜூ பெயரைச் சொல்கிறார். அவரை தொடர்ந்து வரும் சிபி, பவானி ரெட்டி, தாமரைச்செல்வி, இசைவாணி ஆகியோர் ராஜு மற்றும் இமான் அண்ணாச்சி பெயரைச் சொல்கிறார்கள்.

இதைக் கேட்டவுடன் இமான் அண்ணாச்சியின் முகம் சற்று சங்கடமாக மாறியது. அதற்கு மாறாக ராஜூவின் கண்ணில் ஒரு கோபம் தெரிகிறது. பிக்பாஸ் தேர்ந்தெடுக்கப்பட்ட இருவருக்கும் தண்டனை வழங்குகிறார்.

அதாவது கார்டன் ஏரியாவில் உள்ள சேரில் இமான் மற்றும் ராஜூ இருவரும் அமர வேண்டும். அங்கு பக்கெட்டில் வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை ஹவுஸ் மேட் ஒவ்வொருவராக வந்து அவர்களின் தலையில் ஊற்ற வேண்டும் இதுதான் தண்டனை.

ஒவ்வொருவராக வந்து தண்ணீரை ஊற்ற ராஜு மற்றும் இமான் அண்ணாச்சி இருவரும் நடுங்கியபடியே அமர்ந்துள்ளனர். இறுதியாக வரும் தாமரையிடம் ராஜு கோபமாக செருப்ப கழட்டி ஒரு அடி அடிச்சுட்டு அப்புறமா வந்து சொல்லு ரொம்ப என்று சொல்கிறார்.

பிக்பாஸ் தொடங்கிய நாள் முதல் இன்று வரை ராஜு, தாமரைக்கு ஆதரவாக பல விஷயங்களில் இருந்துள்ளார். ஆனால் தாமரையோ அதற்கான நன்றி இல்லாமல் மற்ற போட்டியாளர்களுடன் சேர்ந்து கொண்டு இவ்வாறு கூறியது தான் ராஜூவின் கோபத்திற்கு காரணம்.

எல்லாரும் ஒன்று சேர்ந்த ஒருத்தர கார்னர் பண்ணும் போது அவர் ஹீரோ ஆயிடுவான் என்பதை மறந்து போட்டியாளர்கள் விளையாடுகின்றனர். இந்த ப்ரோமோவை பார்த்த ரசிகர்கள் எல்லாத் தடைகளையும் தகர்த்து ராஜு பைனல் வருவார் என்று கருத்துக்களை கூறுகின்றனர்.

 

Contact Us