“ஒட்டு துணியில்லாம உட்கார்ந்த பெண்ணுக்கு கட்டு கட்டா பணம்” -ஒரு இரவு முழுவதும் நடந்த விபரீதம்

கர்நாடக மாநிலம் பூனஹள்ளியைச் சேர்ந்த விவசாயி ஸ்ரீனிவாஸ் என்பவர், 2019-ம் ஆண்டு திருமண நிகழ்ச்சிக்காக தமிழகம் வந்த போது ஒரு போலி சாமியார் ஷாஹிகுமார் என்பவருடன் தொடர்பு கொண்டார். அதன் பிறகு அந்த ஷாகி குமார் , 75 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட ஸ்ரீனிவாஸின் வீட்டிற்கு வந்தார். , அப்போது ஸ்ரீநிவாசின் வீட்டிற்குள் புதையல் இருப்பதாக ஷாஹிகுமார் தெரிவித்தார்.

அதனால் கர்நாடக மாநிலம் ராமநகராவில் உள்ள ஸ்ரீனிவாஸ் வீட்டில் புதைந்துள்ள புதையலை எடுக்க ஒரு இளம் பெண்ணை இரவு முழுவதும் நிர்வாணமாக உட்கார வைத்து பூஜை செய்தால் அந்த புதையலை எடுக்கலாம் என்று ஆசை காமித்தார் .அதனால் அந்த ஸ்ரீநிவாஸ் ஒரு அந்த பகுதியை சேர்ந்த ஒரு ஏழை இளம் பெண்னுக்கு அதிக பணம் கொடுப்பதாக ஆசை காமித்து ஒரு நாள் இரவு முழுவதும் நிர்வானமாக அந்த சாமியார் முன்பு உட்கார வைத்து பூஜை நடத்தினார்.

அப்போது அந்த இளம் பெண்ணின் நாலு வயதான மகளும் அருகில் இருந்தார் .பின்னர் இது பற்றி அந்த அப்பகுதி போலீசார் தகவல் கேள்விப்பட்டு அந்த கூட்டத்தினை கைது செய்தனர் .கைது செய்யப்பட்டவர்கள் பாதிரியார் ஷாஹிகுமார், அவரது உதவியாளர் மோகன், கொத்தனார்கள் லட்சுமிநரசப்பா, லோகேஷ், நாகராஜ் மற்றும் பார்த்தசாரதி என்ற நபர்கள் ஆவார்கள் .

Contact Us