“100 வீரர்கள்; புதிய ஆயுதங்கள்… தெறிக்கும் போர்க்களம்” – களமிறங்கிய புதிய பப்ஜி!

சிறுவர்கள், இளைஞர்களின் நாடித்துடிப்பாக விளங்கியது பப்ஜி கேம். விளையாட்டுப் பிரியர்களின் பெருவாரியான சாய்ஸாக பப்ஜி இருந்தது. சாப்பிட மறந்தாலும் பப்ஜியில் விளையாட மறக்க மாட்டார்கள். பப்ஜியால் பணம் முதல் உயிர் வரை இழந்திருக்கிறார்கள். இதுதொடர்பான செய்திகளை நாம் அவ்வப்போது பார்த்து படித்து வருகிறோம். இந்த ஆபத்தான பப்ஜி கேமை பாதுகாப்பு குறைபாடு காரணமாக கடந்தாண்டு செப்டம்பர் மாதம் மத்திய அரசு இந்தியாவில் தடை செய்தது.

ஆனாலும் ஒருசிலர் VPN முறையில் சட்டவிரோதமாக விளையாடி வருகின்றனர். அப்படி விளையாடி தான் ஆபாச பப்ஜி மதன் சொகுசு காராக கருதப்படாத ஆடி கார்களை வாங்கினார். இந்தியாவின் மார்க்கெட் பெரியது. இதனால் இந்தியாவிற்காக பிரத்யேகமாக பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த புதிய பப்ஜி கேமை தென் கொரியாவின் கிராஃப்டன் நிறுவனம் தயாரித்துவந்தது. இதற்கு பப்ஜி: நியூ ஸ்டேட் (PUBG:New state) என்ற பெயரில் புதிய கேமை தயாரித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அதிகரித்தது.

PUBG: New State கேமை நவம்பர் 11ஆம் தேதியன்று இந்தியா உட்பட உலகளவில் வெளியிடவுள்ளதாக கிராஃப்டன் நிறுவனம் அறிவித்தது. இந்த கேமானது ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களிலும் ஐபோன்களில் விளையாடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்கான முன்பதிவு தொடங்கப்பட்டு 50 மில்லியனுக்கும் அதிகமான முன்பதிவுகள் செய்யப்பட்டுள்ளன. இன்று வெற்றிக்கரமாக வெளியிடப்பட்டது. 100 வீரர்கள் வெவ்வேறு ஆயுதங்கள் மற்றும் உத்திகளைப் பயன்படுத்தி சண்டையிடும் போர் அனுபவத்தை இந்த புதிய கேம் விளையாடுபவர்களிடம் ஏற்படுத்தும் என கிராஃப்டன் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Contact Us