“ஆட்டோவிலேயே ஆறு தடவை …”டைவர்ஸ் ஆன பெண்ணுக்கு நடுரோட்டில் நடந்த கொடுமை .

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் செம்பூரில் உள்ள வாஷி நாகா பகுதியில் அகன்ஷா காரத்மோல் என்ற 22 வயதான பெண் தாராவியில் உள்ள ஒரு வரவேற்பாளராக பணிபுரிந்தார்.அந்த பெண் அக்ஷய் அதவலே என்ற அரசு கோவிட் மையத்தில் பணிபுரியும் ஒரு வாலிபரை காதலித்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார் .அதன் பிறகு சந்தோஷமாக போய் கொண்டிருந்த அவர்களின் வாழ்வில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பரஸ்பரம் விவகாரத்து செய்து கொண்டனர்.

அதன் பிறகு இருவரும் தனித்தனியாக வசித்து வந்த நிலையில் அந்த பெண்னின் முன்னால் கணவர் அக்ஷய் அந்த பெண்ணை அடிக்கடி சந்திக்க விரும்பினார், ஆனால் அந்த பெண் அவரை சந்திக்க மறுத்து விட்டார் .அதன் பிறகு கடந்த வாரம் அந்த அகன்ஷாவுக்கு பிறந்த நாள் வந்தது .அப்போது அவரை சந்திக்க வந்த அந்த அக்ஷயுடன் அந்த பெண் பேச மறுத்து விட்டார்.

இதனால் கோபமடைந்த அந்த அக்ஷய் அந்த பெண்ணை பழி வாங்க கத்தியோடு அலைந்தார் .அதனால் கடந்த வாரம் அந்த பெண் ஒரு ஆட்டோவில் சென்ற போது அந்த அக்ஷய் அந்த பெண்ணை பின் தொடர்ந்து சென்றார் .பின்னர் அந்த ஆட்டோவிலேயே அவரை ஆறு முறை கத்தியால் குத்தினார் .இதனால் படுகாயமற்ற அவரை அங்குள்ள ஹாஸ்பிடலில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார் .இது பற்றி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்

Contact Us