“வீடு தீயில் எரிந்துகொண்டிருக்கும் போது மதப்பிரச்சாரம்!”.. முகநூல் நேரலையில் காண்பித்த மதப்பரப்புரையாளர்..!!

அமெரிக்காவில் இருக்கும் தென் கரோலினா நகரத்தைச் சேர்ந்த மத பரப்புரையாளரான சமி ஸ்மித், கிரேஸ் கத்திடரல் மினிஸ்டரிஸ் என்ற பரப்புரை அமைப்பினுடைய நிறுவனராக உள்ளார். இந்நிலையில், சமீபத்தில் இவர் முகநூல் தளத்தில் நேரலையில் வந்திருக்கிறார். அப்போது, அவரின் வீடு தீ பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.

அதனை அப்படியே காண்பித்துக் கொண்டிருக்கிறார். மேலும், அதை பயன்படுத்தி கடவுளின் பெயரைச் சொல்லி மத போதனை செய்திருக்கிறார். அந்த நேரலையில், “என் வீடு தீப்பற்றி எரிகிறது” என்று பலதடவை கூறிக்கொண்டிருக்கிறார். அவர் பேசிக்கொண்டிருக்கும் போதே அவரின் வீடு முழுக்க அதிகமாக தீப்பற்றி எரிகிறது.

தீயை கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்கள் போராடிக் கொண்டிருக்கின்றனர். இந்த காட்சிகளை அவர் நேரலையில் காண்பித்துக் கொண்டிருக்கிறார். அந்த சமயத்தில் அவரது அண்டை வீட்டுக்காரர்கள் தீயை கட்டுப்படுத்த உதவி செய்கிறார்கள். அதையும் அவர் நேரலையில் காண்பிக்கிறார்.

நெருப்பு முழுக்க அணைந்த பின், நல்லவேளையாக எவரும் காயமடையவில்லை, உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று கூறுகிறார். எனினும் அவரின் வீடு முழுக்க சேதமாகியிருக்கிறது. தன் வீடு எரிந்து கொண்டிருக்கும் சமயத்தில், முகநூல் பக்கத்தில் நேரலையில் வந்து மதப் பரப்புரை செய்து கொண்டிருந்த சமி ஸ்மித், இதுகுறித்து ஒரு நேர்காணலில் தெரிவித்திருப்பதாவது, எந்த நேரத்திலும் யாருக்கும் இது போன்ற கொடுமைகள் நேரும். அதற்கு எந்த இடத்தில் இருக்கிறோம் என்பது தேவையில்லை என்று கூறியிருக்கிறார்.

Contact Us