மது விருந்து விழாவில்…. பெண் இராணுவ வீரருக்கு பாலியல் வன்கொடுமை…. பிரபல நாட்டில் பரபரப்பு….!!

பிரான்ஸ் நாட்டு ஜனாதிபதியின் அதிகாரப்பூர்வ மாளிகையில் கடந்த ஜூலை 1 ஆம் தேதி 3 இராணுவ அதிகாரிகளுக்கு பிரியாவிடை அளிக்கும் விருந்து ஒன்று நடைபெற்றது. இவ்விழாவிற்கு தலைமை வகித்த ஜனாதிபதி இமானுவல் மேக்ரான், இரவு 10 மணியளவில் விருந்தை முடித்து கொண்டு கிளம்பி சென்றுள்ளார்.

இந்த நிலையில், ஜனாதிபதி மேக்ரான் வெளியேறிய பின், அதிகளவில் மது அருந்திய அதிகாரி பெண் இராணுவ வீரர் ஒருவரை ஆசைவார்த்தை கூறி தனியாக அழைத்து சென்றுள்ளார். பின்னர், உயர்மட்ட இரகசிய கூட்டங்கள் அரங்கேறும் பகுதிக்கு அவரை அழைத்து சென்று பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கினார்.

இது குறித்த தகவல்களை நேற்று பிரான்ஸின் ஜனாதிபதி மாளிகை தலைமை அதிகாரி அறிவித்தார். இதனை தொடர்ந்து, அடுத்த நாள் பெண் இராணுவ வீரர் தனக்கு நேர்ந்த சம்பவம் குறித்து போலீசாரிடம் புகார் அளித்தார். தற்போது, இந்த சம்பவத்தில் தொடர்புடைய இராணுவ அதிகாரியை கைது செய்து நீதிமன்ற விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Contact Us