கோவை: பாலியல் தொல்லையால் பள்ளி மாணவி மரணம் – கனிமொழி ரியாக்‌ஷன் இதுதான்!

ஆசிரியர்கள் தவறு செய்தாலும் பள்ளி நிர்வாகம் அவர்களை கேள்வி கேட்பது இல்லை என்று கனிமொழி வேதனை தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் – ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி, கருங்குளம் ஒன்றியத்தில் உள்ள மணக்கரை ஊராட்சியில் சமீபத்தில் பெய்த மழையால் சேதமடைந்த பாலத்தைப் பாரவையிட்ட எம்பி கனிமொழி, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். அப்போது, ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.
.
அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த கனிமொழி, கோவை மாணவியின் தற்கொலை பற்றிய கேள்விகளுக்கும் பதிலளித்தார். அவர் கூறுகையில், பள்ளியில் படிக்கக்கூடிய மாணவர்கள் பாதுகாப்பாக இருப்பார்கள் என்கிற நம்பிக்கையில் தான் மாணவர்கள் பள்ளிக்கூடங்களுக்கு அனுப்பப்படுகிறார்கள். அங்கேயும் மிக மோசமாக மாணவர்கள் பாதிப்படைகிறார்கள்.

தொடர்ந்து பல்வேறு பள்ளிகளில் இந்த மாதிரி பிரச்சினைகள் வந்து கொண்டுதான் இருக்கிறது. இது மிக வருத்தமான விஷயம் என்றாலும் ஆசிரியர்கள் தவறு செய்தாலும் பள்ளி நிர்வாகம் அவர்கள் கேள்வி கேட்பது இல்லை. அந்த நிர்வாகம் சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும். மாறாக மூடி மறைக்க, அந்த புகாரை அளித்த மாணவர்களை மிரட்டுவது, அமைதிப் படுத்துவது அவர்களின் குறிக்கோளாக இருக்கிறது. தவறு செய்யும்போது எந்த வித நடவடிக்கையும் நிர்வாகம் எடுப்பதில்லை.

இந்த விஷயத்தில் கூட தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க நிர்வாகம் காவல்துறையில் புகார் கொடுத்திருந்தால், அந்த மாணவி கண்டிப்பாகக் காப்பாற்றப்பட்டு இருப்பார். இங்கு மட்டுமல்ல பல இடங்களில் நடந்து கொண்டுதான் இருக்கிறது. கல்வி நிறுவனம் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும். நான் பலமுறை மக்களைவிலும் இதை பற்றி கேள்வி எழுப்பியுள்ளேன்” என இவ்வாறு கனிமொழி கூறினார்.

Contact Us