சார்… தயவு செஞ்சி போய்டுங்க… கோவை மாணவியின் வாட்சப் சேட் வெளியீடு..!

கோவை கோட்டைமேடு பகுதியில் வசித்து வந்த 17வயது மாணவி ஒருவர் ஆர்.எஸ்.புரத்தில் உள்ள சின்மயா வித்யாலயா தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தார். இவர் திடீரென தனது பெற்றோரிடம் சின்மயா பள்ளி செல்ல விரும்பவில்லை எனக்கூறி மாற்றுச்சான்றிதழ் பெற்று, ஆர் எஸ் புரம் பகுதியில் உள்ள வேறொரு தனியார் பள்ளியில் சேர்ந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை வீட்டில் தனியாக இருந்த மாணவி, அறையில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் அளித்த புகாரின் பேரில் உக்கடம் போலீசார், சம்பவ இடத்திற்கு வந்து, மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனிடையே மாணவி பயின்று வந்த பள்ளியில் இயற்பியல் ஆசிரியராக பணியாற்றி வரும் மிதுன் சக்ரவர்த்தி என்பவர் மாணவிக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாகவும், இதனால் அவரிடமிருந்து தப்பவே மாணவி பள்ளியில் இருந்து விலகியதாகவும், இருப்பினும் தொடர்ந்து தொல்லை கொடுத்ததால் மாணவி தற்கொலை செய்து கொண்டுவிட்டுள்ளதாகவும் சக மாணவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

பள்ளியில் பல மாணவிகளுக்கும் ஆசிரியர் மிதுன் பாலியல் தொல்லை கொடுத்துள்ளதாகவும், அவரைக் கைது செய்து விசாரணை நடத்தினால் மட்டுமே பல உண்மைகள் வெளியே வரும் என சக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், பள்ளி நிர்வாகம் மாணவி புகார் அளித்த போது உடனடி நடவடிக்கை மேற்கொண்டு இருந்தால் இதுபோன்ற ஒரு இழப்பு நடந்து இருக்காது என மாணவியை சார்ந்தவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இதனிடையே உக்கடம் போலீசார் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தியை கைது செய்து விசாரித்து வருகின்றனர். அவர் மீது போக்சோ உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரை தொடர்ந்து பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் மீதும் வழக்கு பதியப்பட்டு அவரை தேடி வருகின்றனர்.

இந்நிலையில், தற்கொலை செய்துகொண்ட மாணவி ஆசிரியரிடம் பேசிய வாட்சப் உரையாடல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த உரையாடலில், ஆரம்பத்தில் நல்லவரை போல தானே பழகினீர்கள்… இப்போது என்னிடம் செக்ஸ் பற்றியும் பேசுவீர்கள் என்று நினைக்கவில்லை. நீங்கள் என்னை பாலியல் ரீதியாக அணுகியபோது உங்களை எப்படி அவாய்ட் செய்வது என்று தெரியவில்லை… நீங்கள் தயவு செய்து இந்த பள்ளியை விட்டு பொய் விடுங்கள்… அதுவே நீங்கள் செய்யும் பெரும் உதவி… என்று அந்த மாணவி ஆசிரியரிடம் கெஞ்சியுள்ளார். ஆனால், அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காததால் அந்த மாணவி தற்கொலை செய்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Contact Us