லண்டனில் 3 பள்ளி மாணவர்களுக்கு 50 ஆண்டுகள் சிறை: 35 தரம் கத்தியால் குத்தி ஏரியில் பிணத்தை போட்டு வீடியோ வேறு எடுத்தார்கள்…

பிரித்தானியாவில் மூன்று 16 வயது மாணவர்களுக்கு, 50 வருட சிறைத் தண்டனையை நீதிமன்றம் வழங்கி அதிரவைத்துள்ளது. இவர்கள் தலா 20 வருடங்களுக்கு மேல் சிறையில் கட்டாயம் இருக்க வேண்டும் என்று நீதிபதி கடும் உத்தரவை பிறப்பித்துள்ளார். இவர்கள் மூவரும் இணைந்து லிவர்பூல் என்னும் இடத்தில், வீதியால் சென்று கொண்டு இருந்த 33 வயதான ஸ்கொட் அன்டேட்டன் என்ற நபரை பின் தொடர்ந்து சென்று, 35 தடவை கத்தியால் குத்தியுள்ளார்கள். பின்னர் அதனை வீடியோவாக எடுத்துக் கொண்டு. இறந்த நபரை ஒரு ஏரியில் தள்ளி விட்டு. அதனையும் வீடியோ எடுத்துள்ளார்கள். ஒரு கொலை என்பது இந்த மாணவர்களுக்கு அவ்வளவு சாதாரண விடையமாக போய் விட்டது என்பது பெரும் அதிர்ச்சி… ஆனால் அந்த இடத்தில் இருந்து குறித்த மூவரும் தப்பி விட்டார்கள்… பொலிசார்…

பெரும் விசாரணைகளை ஆரம்பித்து, இறுதியாக ஸ்காட்லன் யாட் பொலிசார் இந்த கொலை விசாரணையைக் கையாண்டு மூன்று மாணவர்களையும் கைது செய்தார்கள். கடந்த மே மாதம் இந்தக் கொலை நடந்தது. தண்டனை தற்போது கிடைத்துள்ளது. இவர்கள் மூவருக்குமாக சேர்த்து 50 வருடங்களை அறிவித்துள்ளார் நீதிபதி.  குறித்த 3 மாணவர்களும் கொலை செய்யப்பட்ட நபரை பின் தொடரும் CCTV காட்சிகளை பொலிசார் தற்போது தான் வெளியிட்டுள்ளார்கள். கீழே இணைக்கப்பட்டுள்ளது.

Contact Us