பிரான்ஸ் நாட்டில் துஷ்ப்ரயோகத்துக்கு ஆளாக்கப்பட்டு வீதியில் தூக்கி வீசப்பட்ட பெண்

இளம் பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு வீதியில் வீசப்பட்ட நிலையில் மீட்க்கப்பட்டுள்ளார். பாரிஸ் 18 ஆம் வட்டாரத்தில் இடம்பெற்றுள்ளது. கடந்த வார இறுதியில் வீதி கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் குறித்த இளம் பெண்ணை மீட்டுள்ளனர். அந்த பெண் Boulevard Barbès பகுதியில் உள்ள கட்டிடம் ஒன்றின் கீழே வீதியில் குறித்த இளம் பெண் மயக்கமடைந்து கிடந்த நிலையில், உடனடியாக அவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

Bichat மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வந்தபோது, பொலிஸார் குறித்த பெண்ணிடம் வாக்குமூலம் பெற்றனர். பின்னர், இச்சம்பவத்தில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்பட்டு, 16 வயதுடைய பதின்ம வயது சிறுவன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளான்.

பாதிக்கப்பட்ட பெண்ணுடன் குறித்த சிறுவன் புகைப்படங்கள் எடுத்துள்ளமை தெரியவந்துள்ளது. 18 ஆம் வட்டார பிரிவு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Contact Us