மன்னாரில் சடலமாக மீட்கப்பட்ட இளம் பெண்ணுக்கு நடந்தது என்ன? கூட்டிக் கொண்டு போகிறவர் யார் ?

மன்னார் – கோந்தைப்பிட்டி கடற்கரைப் பகுதியில் நேற்றைய தினம் சனிக்கிழமை காலை சடலமாக மீட்கப்பட்ட பெண் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மன்னார் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். மேலும் குறிப்பிடுகையில், குறித்த யுவதி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கீர்த்தனா (வயது;22) எனத் தெரிய வந்துள்ளதோடு, மன்னார் மூன்றாம் பிட்டிப் பகுதியில் தனது சகோதரருடன் வசித்து வந்த நிலையில், மன்னார் ஆடைத் தொழிற்சாலையில் கடந்த இரண்டு மாதங்களாக பணியாற்றிய நிலையில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

குறித்த யுவதியின் தந்தை சிறு வயதிலே மரணித்த நிலையில் தாயின் பராமரிப்பில் குறித்த யுவதி மற்றும் இரு சகோதரர்கள் இருந்துள்ளனர். தாய் பல்வேறு கூலித் தொழிலில் ஈடுபட்டு கிடைத்த வருவனத்திலே மூவரையும் பராமரித்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. குறித்த யுவதி உறவினர் ஒருவருடன் மன்னார் ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றி வந்த நிலையில், கடந்த வியாழக்கிழமை (11) பணி முடிவடைந்த பின்னர் மன்னார் பேருந்து தரிப்பிடத்திற்குச் சென்றுள்ளார்.அதன்போது தனது ஆண் நண்பர் ஒருவருடன் சந்திப்பை மேற்கொண்ட காணொளி வெளியாகியிருந்தது. பின்னர் நேற்றைய தினம் சனிக்கிழமை பெண்ணின் சடலம் கோந்தைப்பிட்டி கடற்கரைப் பகுதியில் மீட்கப்பட்டது. இருப்பினும் குறித்த பெண்ணின் மரணத்திற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.

யுவதியின் சடலத்தை தாய் மற்றும் சகோதரர் ஒருவர் இன்றைய தினம் காலை வைத்தியசாலைக்குச் சென்று அடையாளம் காட்டியுள்ளனர்.மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

Contact Us