இசைவாணியை கமலிடம் போட்டுக்கொடுத்த போட்டியாளர்கள்.. வார்னிங் கொடுக்கப்பட்ட முதல் கேப்டன்

பிக் பாஸ் சீசன் 5 இன்றைய நாளுக்கான ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது. இதில் கமல் போட்டியாளர்களிடம் இந்த வார கேப்டன் இசைவாணி எவ்வளவு நல்ல கேப்டனாக இருந்தார் என்று கேட்கிறார்.

அதற்கு போட்டியாளர்கள் அனைவரும் இசைவாணி ஒரு நல்ல கேப்டனாக இல்லை என்று பதிலளித்தனர். ஒவ்வொருவரும் காரணத்தை சொல்ல சொல்ல இசைவாணியின் முகம் முதலில் அதிர்ச்சியை காட்டியது. பின்னர் கவலையான முகத்துடன் அமர்ந்திருந்தார்.

அதிலும் தாமரை, இசைவாணி சாப்பாடு பரிமாறும் போது அன்பாக செய்யாமல் கொஞ்சம் முரட்டுத்தனமாக நடந்து கொண்டதாக கூறினார். இதைக் கேட்ட இசைவாணி அடிப்பாவி என்பது போல் தாமரையைப் பார்த்தார்.

அனைவருடைய கருத்தையும் கேட்ட கமல், இசைவாணியிடம் முதன் முதலாக வார்னிங் கொடுக்கப்பட்ட கேப்டன் நீங்கள் தான் என்று கூறினார். அதற்கு இசைவாணி பதில் பேச முடியாமல் தலை குனிந்து அமர்ந்திருந்தார்.

சில நாட்களாக இசைவாணியின்  நடவடிக்கையில் கொஞ்சம் மாற்றம் தெரிகிறது. அதாவது ஆரம்பத்தில் பிக் பாஸ் வீட்டிற்கு வரும்போது இருந்த இசைவாணி ரொம்பவும் பாவப்பட்ட முகமாக தெரிந்தார்.

ஆனால் தற்போது இருக்கும் இசைவாணி கொஞ்சம் அகங்காரத்துடன் இருக்கிறார். இமான் அண்ணாச்சி கொடுத்த கிரீடத்தை தலையில் போடாமல் தூக்கி எறிந்ததே அதற்கு ஒரு உதாரணம் ஆகும்.

மேலும் ராஜுவிற்கு தேவையில்லாத ஆணியை புடுங்குபவர் என்ற பட்டத்தை கொடுத்தவர் இசைவாணி. தற்போது அவரே வீட்டில் தேவையில்லாத ஆணியாக மாறிவிட்டார்.

https://youtu.be/veul2Pppgio

Contact Us