விராட் கோலி குழந்தைக்கு பாலியல் மிரட்டல்: வாக்குமூலத்தை கேட்டு அதிர்ச்சியான போலீஸ்!

விராட் கோலி குழந்தைக்கு பாலியல் மிரட்டல் விடுத்தவரின் வாக்குமூலத்தை கேட்டு போலீசார் அதிர்ச்சியடைந்துள்ளனர்
விராட் கோலி தலைமையிலான இந்திய அணி டி20 உலகக் கோப்பை முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியிடம் தோற்றது. இது சமூக வலைதளங்களில் பெரும் விமர்சனத்துக்குள்ளானது. சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனத்துக்குள்ளான முகமது ஷமிக்கு விராட் கோலி ஆதரவு தெரிவித்தார்.

இதையடுத்து, விராட் கோலி-அனுஷ்கா ஷர்மாவின் 10 மாத பச்சிளங்குழந்தைக்கு சமூக வலைதளமான ட்விட்டரில் ஒருவர் பாலியல் மிரட்டல் விடுத்தார். இதற்கு கடும் கண்டனங்கள் எழுந்ததுடன் மிரட்டல் விடுத்தவரை கைது செய்ய வேண்டும் எனவும் கோரிக்கைகள் வலுத்தன.

தொடர்ந்து, கோலியின் குழந்தைக்கு மிரட்டல் விடுத்ததாக தெலங்கானா மாநிலம் சங்கராரெட்டியைச் சேர்ந்த 23 வயது இளைஞர் அகுபதினி ராம் நாகேஷ் என்பவரை போலீசார் கைது செய்தனர், ஐஐடி பட்டதாரியான அவர் மீது, ஐபிசி பிரிவு 374(ஏ), 506, 500 தகவல்தொழில்நுட்பச் சட்டம் பிரிவு 67 மற்றும் 67(பி) ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மும்பை சிறையில் அவர் அடைக்கப்பட்டுள்ளார்.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பாகிஸ்தானிடம் இந்தியா தோற்றதால் ஆத்திரத்தில் அப்படி எழுதினேன். செல்போன் கீழே விழுந்ததால் அது ட்வீட் ஆகிவிட்டது என கூறியுள்ளார். இதனை கேட்டு போலீசார் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

கப்பிஸ்தான் ரேடியா என்ற கணக்கை அகுபதினி ராம் நாகேஷ் தொடர்ந்து வந்ததாகவும், அதில் விராட் கோலி ரசிகர்களுக்கும், அவரது வெறுப்பாளர்களுக்கும் இடையே ட்விட்டர் மோதல் நடைபெற்ற போதுதான் இந்த பதிவை அவர் பதிவிட்டுள்ளார் என்று மும்பை போலீசார் தெரிவித்துள்ளனர்.

Contact Us