இலங்கையில் விரைவில் ஆட்சி மாற்றம்; பிரபல ஜோதிடரின் கணிப்பால் பரபரப்பு!

நடைபெற உள்ள சனி மற்றும் குரு பெயர்ச்சிகள் காரணமாக எதிர்வரும் 20ஆம் திகதிக்கு பின்னர் இலங்கைக்குள் புதிய அரசியல் சக்தி முன்நோக்கி வரும் என பிரபல சோதிடர் கே.ஏ.யூ. சரத் சந்திர தெரிவித்துள்ளார்.

வலையெளித்தளம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை கூறியுள்ளார்.

முன்நோக்கி வரும் அந்த புதிய அரசியல் சக்தி நாட்டின் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றும். மக்களுக்கு புத்தி தெளிவு ஏற்பட்டு, மக்களே அந்த புதிய அரசியல் சக்தியை உருவாக்குவார்கள்.

எதிர்வரும் 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கு முன்னர் அரசாங்கம் கட்டாயம் தேர்தல் ஒன்றை நடத்த நேரிடும் என்பது கிரக சுழற்சிகள் மூலம் தெரிகிறது.

ஆட்சியாளர்கள் பெரும் சிக்கல்கள எதிர்நோக்க நேரிடும். அரசியல் கட்சித் தாவல்களும் நடக்க வாய்ப்புள்ளது. எதிர்காலத்தில் அரசியல் கருத்து முரண்பாடுகள் ஏற்படும்.

அத்துடன் இந்த கிரகப் பெயர்ச்சிகள் காரணமாக இலங்கை மக்களுக்கு கஷ்டமான நிலைமை ஏற்படும் எனவும் சரத் சந்திர குறிப்பிட்டுள்ளார்.

Contact Us