இரவில் தனியாக தத்தளித்த கனேடிய இளம்பெண்: விசாரணையில் தெரியவந்த பகீர் பின்னணி

நோவா ஸ்கோடியாவில் இரவு நேரம் தனியாக தத்தளித்த இளம்பெண்ணை பொலிசார் மீட்டுள்ளனர். நியூ பிரன்சுவிக் பகுதியை சேர்ந்த 16 வயது இளம்பெண் ஒருவர் நோவா ஸ்கோடியாவின் Bridgewater பகுதியில் தனியாக சிக்கியுள்ளார்.

ஆனால் துணிவாக அப்பெண் 911 இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு தமக்கு உதவ வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளார். இதனையடுத்து, குறித்த பெண் குறிப்பிட்ட பகுதிக்கு விரைந்த Bridgewater பொலிசார், குறித்த பெண்ணை மீட்டுள்ளனர். பொலிசார் வெளியிட்ட தகவலில், அவள் கவலையாகவும் அதிர்ச்சியுடனும் காணப்பட்டார் என குறிப்பிட்டுள்ளனர்.

மட்டுமின்றி, அவரிடம் எந்த அடையாள அட்டைகளோ, பணமோ, தாம் எந்த பகுதியில் சிக்கியுள்ளோம் என்பதையோ அவர் அறிந்திருக்கவில்லை என்கிறார்கள்.

முதற்கட்ட விசாரணையில், கட்டுமான நிறுவன ஊழியர்கள் சிலருடன் நோவா ஸ்கோடியா மற்றும் நியூ பிரன்சுவிக் பகுதிகளில் அவர் பயணித்ததாகவும், அவர்களே குறித்த பெண்ணின் மொபைலை பறித்து வைத்திருந்தாகவும் தெரியவந்துள்ளது.

மேலும், இந்த வாரத்தில் ஒருநாள் ஆண் மற்றும் பெண் ஒருவரால் தாம் சீரழிக்கப்பட்டுள்ளதாகவும், குறிப்பிட்ட ஒரு ஹொட்டலை அவர் அடையாளம் காட்டியதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

சுமார் 3 வாரங்கள் முதல் ஒரு மாதம் வரையில், குறித்த 16 வயது பெண் அந்த கட்டுமான நிறுவன ஊழியர்களுடன் பல பகுதிக்கு கோண்டு செல்லப்பட்டதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

மேலும், அறிமுகமில்லாத நபர்களுடன் நெருக்கமாக இருந்ததற்காக தன்னுடன் இருந்த நபர்கள் பணம் பெற்றதாக அவர் பொலிசாரிடம் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரத்தில் தற்போது இருவர் கைது செய்யப்பட்டதுடன், அவர்கள் மீது பல பிரிவுகளில் வழக்கும் பதியப்பட்டுள்ளது. தற்போது அந்த பெண் அவரது சொந்த கிராமத்திற்கே அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

Contact Us