“மாணவியின் மடியில் தலை வைத்து …”வகுப்பறையில் ஒரு மாணவன் செயலால் ஆசிரியருக்கு நேர்ந்த கதி

மகாராஷ்டிர மாநிலம் மும்பையின் அந்தேரி (மேற்கு) பகுதியில் 48 வயதான ஆசிரியர் ஒருவர் தனியாக டியூஷன் வகுப்புகளை எடுக்கிறார் . அந்த ட்யூஷனில் கடந்த அக்டோபர் 29 அன்று ​​ஒரு ஆண் மாணவன் தன்னோடு படிக்கும் ஒரு டீனேஜ் மாணவியின் மடியில் தலையை வைத்துக் கொண்டிருப்பதை அந்த ஆசிரியர் கவனித்தார் . உடனே அந்த ஆசிரியர் ஆத்திரப்பட்டு அந்த 16 வயது மாணவியை கடுமையாக திட்டினார். அப்போது அவர் அந்த மாணவி பற்றி தவறான கருத்துக்களை வெளியிட்டுள்ளார் . மேலும் அந்த மாணவியை “விபச்சாரி” என்று கூட திட்டியுள்ளார்

இதனால் அந்த மாணவி மிகவும் மன வேதனைப்பட்டு அந்த ட்யூஷனில் அழுதார் .அப்போது சக மாணவ மாணவிகள் அவரை சமாதானப்படுத்தினர். இருந்தாலும் அந்த மாணவி வீட்டுக்கு வந்து தன்னுடைய பெற்றோரிடம் ,ஒரு மாணவனின் தலை தவறாக தன் மீது பட்டதால் ,அந்த ஆசிரியர் தன்னை விபச்சாரி என்று திட்டியதாக கூறினார் .அதை கேட்டு கோபமடைந்த அந்த மாணவியின் பெற்றோர் அங்குள்ள காவல் நிலையம் சென்று அந்த ஆசிரியர் மீது புகார் கூறினர் .போலீசார் அவர்கள் கொடுத்த புகாரின் பேரில் அந்த ஆசிரியர் மீது வழக்கு பதிவு செய்தனர் .பின்னர் அவரை கைது செய்து சிறையில் அடைத்து ,விசாரித்து வருகின்றார்கள் .

Contact Us