“கல்யாணத்துக்கு முன்னாடி கண்ட இடத்துல கை வைக்காதிங்க” -நிச்சயமான பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை .

கர்நாடக மாநிலம் தார்வார் மாவட்டம் உப்பள்ளி டவுன் அசோக் நகர் பகுதியில் வசித்து வந்தவர் 25 வயதான பவித்ரா . இவருக்கும் ஹாவேரி மாவட்டத்தை சேர்ந்த அபினந்தன் என்பவருக்கும் இருவீட்டு பெற்றோரும் திருமணம் செய்ய முடிவெடுத்து , கடந்த 1-ந்தேதி இருவருக்கும் திருமண நிச்சயத்தார்த்தம் முடிந்தது.

அதன் பிறகு இருவரும் போட்டோ எடுக்க பல சுற்றுலா தலங்களுக்கு சுற்றுலா சென்றனர் .அப்போது அந்த மாப்பிளை கல்யாணத்துக்கு முன்னாடியே அந்த பவித்ராவிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டார் .அதை கண்டு அந்த மணப்பெண் கோபடைந்து அந்த அபிநந்தனை திட்டியுள்ளார் .

அதனால் அந்த மணமகன் அந்த பெண் மீது மிகவும் கோபம் கொண்டு அவரை திட்டி கொடுமைப்படுத்தினார் .இதனால் மனம் நொந்து போன அந்த பெண் பவித்ரா இப்படி இந்த மணமகன் கல்யாணத்துக்கு முன்னாடியே அநாகரீகமாக நடக்கிறாரே இவரை கல்யாணம் செய்து கொண்டால் எப்படி நிம்மதியாக வாழ்வது என்று யோசித்தார் .அதனால் அவர் கடந்த வாரம் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் .இந்த சம்பவம் பறி தகவலறிந்த போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர் .

Contact Us