“4 பேர் உயிரிழந்த சிறிய விமான விபத்து!”.. அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்த சிறுமி..!!

மிச்சிகன் ஏரியில் சிறிய வகை விமானம், விபத்துக்குள்ளானது. இதில், 4 பயணிகள் உயிரிழந்தனர். இந்நிலையில், அந்த விமானத்தில் பயணித்த 11 வயது சிறுமி தற்போது மீட்கப்பட்டிருப்பதாக அமெரிக்க கடலோர காவல்படை அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள். ஒரு நபர் மற்றும் சிறுமியை ஹெலிகாப்டரில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில் சிறுமி மட்டும் உயிர் பிழைத்ததாக கூறப்பட்டிருக்கிறது.

மிச்சிகனில் இருக்கும், Welke என்ற விமான நிலையத்திற்கு செல்லும் வழியில் அந்த சிறிய வகை விமானம் விபத்துக்குள்ளானது தெரியவந்திருக்கிறது. ஃபெடரல் ஏவியேஷன் நிர்வாகமும், தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியமும், இந்த விபத்து குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்திருக்கிறது.

Contact Us