இந்தியாவில் சிக்கிய இலங்கையின் பாதாள உலக தலைவர்

இலங்கையின் பாதாள உலகத் தலைவனாகக் கருதப்படும் அதுருகிரியவைச் சேர்ந்த சானுக தனநாயக்க என்ற லடியா இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பாதாள உலகத் தலைவனாகக் கருதப்படும் அங்கொட முதலாளியின் நெருங்கிய கூட்டாளியான லடியாவை கோவை குற்றப்பிரிவு காவல்துறையினர் பெங்களூரில் சனிக்கிழமை கைது செய்தனர்.

அவர் சனிக்கிழமை இரவு தலைமை நீதிபதி (சிஜேஎம்) எம் சஞ்சீவி பாஸ்கர் முன் ஆஜர்படுத்தப்பட்டார், பின்னர் சிறையில் அடைக்கப்பட்டார் என்று ரைம்ஸ் ஒப் இந்தியா தெரிவித்துள்ளது.

லடியாவுக்கு தங்குமிட வசதி வழங்கிய 46 வயதான கோபாலகிருஸ்ணன் என்ற நபரையும் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

Contact Us