பிரித்தானியாவில் திட்டமிட்ட பயங்கரவாத தாக்குதலில் ஒருவர் பலி!ஆயுதமேந்திய பொலிஸார் குவிப்பு(PHOTOS)

பிரித்தானியாவில் மருத்துவமனைக்கு வெளியே நடந்த தாக்குதலில் காரொன்று வெடித்து சிதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லிவர்பூல் மகளிர் மருத்துவமனைக்கு வெளியே ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணியளவில் இந்த வெடி சம்பவம் பதிவாகியுள்ளது.

இந்த சம்பவத்தில் அந்த காரில் இருந்த பயணி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதுடன், வாகன ஓட்டுநர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். மேலும் உயிரிழந்தவர் யார் என்பது குறித்து இதுவரை அடையாளம் காணப்படவில்லையெனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த வெடிப்பு சம்பவம் திட்டமிட்ட பயங்கரவாத தாக்குதல் என கூறப்படும் நிலையில், சம்பவம் தொடர்பாக பயங்கரவாதச் சட்டத்தின் கீழ் 29, 26 மற்றும் 21 வயதுடைய மூன்று இளைஞர்கள் குறித்த பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன் காரணமாக மருத்துவமனையைச் சுற்றி, ஆயுதமேந்திய பொலிஸார் பாதுகாப்பு காரணங்களுக்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

 

Contact Us