ஸ்தம்பிதமாகப் போகும் கொழும்பு நகரம்: அரசாங்கம் கடும் எச்சரிக்கை

கொழும்பில் நாளைய தினம் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை நடத்துவதற்கு ஐக்கிய மக்கள் கட்சி நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது. இந்நிலையில் அதனை தடுப்பதற்கு நீதிமன்ற உத்தரவு கிடைத்தால் அதில் கலந்து கொள்ளும் நபர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர எச்சரிக்கை விடுத்துள்ளார்.

குறித்த ஆர்ப்பாட்டத்தை தடுக்குமாறு சுகாதார பிரிவுகள் இதுவரையில் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஏன் ஆர்ப்பாட்டத்தை நடத்த முயற்சிக்கின்றனர். தொற்று நோய் பரவும் சந்தர்ப்பத்தில் இவ்வாறு செய்வது சரியில்லை. நாட்டின் பொருளாதாரத்தை முடக்கி ஆர்ப்பட்டம் நடத்துவதற்கு அனுமதிக்க முடியாது.

எதிர்க்கட்சியினர் நாட்டை கட்டியெழுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். எனினும் இவ்வாறான தொற்று நோய் பரவும் சந்தர்ப்பத்தில் நாட்டிற்கு ஆபத்தை ஏற்படுத்துவமற்கு ஒரு போதும் சந்தர்ப்பம் வழங்க முடியாது.

அத்துடன் பொது மக்களுக்கு பாதுகாப்பு வழங்கும் அமைச்சர் என்ற ரீதியில் என்னால் இதனை ஏற்றுக் கொள்ள முடியாது. நீதிமன்றத்தில் தடை உத்தரவு வழங்கப்பட்டால் இதனை நடத்துவதற்கு அனுமதி வழங்க மாட்டேன்.

நீதிமன்றத்திடம் சுகாதார பிரிவினரே கோரிக்கை விடுத்துள்ளனர் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Contact Us