வீடொன்றில் வெடிப்பு சம்பவம்; இருவருக்கு நேர்ந்த கதி!

அலவ்வயில் பன்கொல்ல, வீடொன்றில் வெடிப்புச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது. இந்த சம்பவத்தில் இருவர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கல் குவாரி வர்த்தகர் ஒருவருக்குச் சொந்தமான வீட்டில் இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது.

இன்று காலை 9.30 மணியளவில் இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பன்கொல்லவில் இரண்டு மாடி வீடொன்றில் இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அத்துடன் வெடிப்புச்சம்பவத்தில் வீடு பலத்த சேதமடைந்துள்ளது. சம்பவத்தில் இரு பெண்கள் காயமடைந்து அலவ்வ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் வெடிப்புக்கான காரணம் இதுவரை கண்டறியப்பட வில்லை என்பதுடன், வெடிப்புச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை போயவலான பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Contact Us