மெக்சிகோவில் இரண்டு வீடுகளில் ஆயுத தாக்குதல்.. 11 பேர் பலியான பரிதாபம்..!!

மெக்சிகோவில் இருக்கும் குவானாஜுவாட்டோ எனும் நகரத்தில் 2 குடியிருப்புகளில் ஆயுத தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது என்று அதிகாரிகள் கூறியிருக்கிறார்கள். முதலில், சிலாவோ என்ற பகுதியில், மர்ம நபர்கள் ஆயுதங்களுடன் வந்து ஒரு குடியிருப்பில் தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள்.

இதில், 6 நபர்கள் உயிரிழந்ததோடு, 4 நபர்களுக்கு காயம் ஏற்பட்டிருக்கிறது. இதேபோன்று மற்றொரு குடியிருப்பிலும் ஆயுத தாக்குதல் நடத்தப்பட்டதில், சிறுமி உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐந்து நபர்கள் உயிரிழந்துள்ளனர்.

Contact Us