வெளிநாடு செல்லவேண்டும் என்றால் பூஸ்டர் ஊசி எடுத்திருக்கவேண்டும் என்ற புதிய சட்டம் பிரிட்டனில் ..

இன்னும் சில நாட்களில், வெளிநாடு செல்ல வேண்டும் என்றால் 40 வயதுக்கு அதிகமானவர்கள் பூஸ்டர் என்று சொல்லப்படும் 3வது ஊசி எடுத்திருக்க வேண்டும் என்ற சட்டம் அமுலுக்கு வரும் என்று கூறப்படுகிறது. இதனை நடை முறைப்படுத்துவது தொடர்பாக பொறிஸ் ஜோன்சன் தற்போது ஆலோசனை நடத்தி வருகிறார். சிலர் முதல் ஊசி எடுத்த பின்னர் பெரும் அச்சத்தில் இருக்கிறார்கள். மேலும் சொல்லப் போனால் 2ம் ஊசி எடுத்த நபர்களுக்கு கூட ரத்தக் கட்டிகள் வந்துள்ளது. இதனால் பலர் பூஸ்டர் என்று அழைக்கப்படும் 3வது ஊசியை தவிர்த்து வருகிறார்கள். ஆனால் பிரிட்டன் அரசோ விட்டபாடாக இல்லை…

இதனால் பூஸ்டர் ஊசி எடுக்காதவர்கள் வெளிநாடு செல்ல முடியாது என்ற சட்டத்தை கொண்டுவருவது தொடர்பாக ஆரயப்பட்டு வருகிறது. எப்படி எல்லாம் கட்டாயப்படுத்துகிறார்கள் என்பது பெரும் ஆச்சரியமான விடையம் தான்.

Contact Us