அரசு ஊழியர்களுக்கு 16000/- சம்பள அதிகரிப்பு கோரி போராட்ட முஸ்தீபு !

அரச சேவைகள் தொழிற்சங்க சம்மேளனம் ஜனாதிபதி அவசர கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளது. இல்லாவிட்டால் தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் தெரிவித்துள்ளனர். சகல அரச ஊழியர்களுக்கும் 16000 ரூபா சம்பள அதிகரிப்பு வழங்கப்பட வேண்டும் என அரச சேவைகள் தொழிற்சங்க சம்மேளனம் ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளது.

தற்போதைய விலைவாசி கூடியுள்ள நெருக்கடியான நிலைமையில் தமது குடும்பங்கள் சொல்லொணாத் கஷ்டம் துன்பங்களை அனுபவித்து வருவதாக வருகின்றனர். அரச சேவையில் உள்ள 15 இலட்சம் ஊழியர்களின் குடும்பங்களை சேர்ந்த 60 இலட்சம் மக்கள் நிலைமையால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே தமது கோரிக்கைக்கு 2 வாரங்களில் ஏற்றுக்கொள்ளத்தக்க தீர்வு கிடைக்க வேண்டும் இல்லாவிட்டால் முன் அறிவித்தல் இன்றி தொடர் தொழிற்சங்க போராட்டத்தை ஆரம்பிக்க திட்டமிட்டு உள்ளோம் என இச்சம்மேளனம் ஜனாதிபதி பிரதமர் மற்றும் நிதி அமைச்சர் ஆகியோருக்கு கடிதங்களை எழுதியுள்ளது.

Contact Us