கொழும்பு அரச அலுவலகத்தில் வெள்ளவத்தை குடும்பப் பெண்ணுக்கு நடந்த அலங்கோலங்கள்!!

அம்மா ஓருவர் வெள்ளவத்தை கிராமசேவகர் பிரிவில் இருந்தவர் இப்பொழுது அகத்தில் இருப்பதால் தெஹிவல கிராமசேவகர் பிரிவிற்கு மாற்றினோம் . தேர்த்தல் பதிவை மாறினேன் . மக்களே !

ஓய்வூதிய கோப்பையும் ( pension file) மாற்ற என்ன செய்ய வேண்டும் ?
படிமுறை 1
தெஹிவலை Gs டம் கேட்டேன் என்ன செய்ய வேண்டும் என்று. வெள்ளவத்தை GS டம் ரத்து செய்து கடிதம் வாங்கி கொண்டு வரும் படி சொன்னார்.
படிமுறை 2
வெள்ளவத்தை GS டம் போனேன் அவர் request letter கேட்டார் அகம் சென்று கடிதம் கொண்டுவந்து கொடுத்தேன், அவரும் எழுதி தந்தார்.
படிமுறை 3
தெஹிவலை GS டம் கொடுத்தேன் அவரும் ஒரு request letter வேனும் என்றார் . மீண்டும் அகம் சென்று இன்னும் ஒரு request கடிதம் கொண்டு வந்து கொடுத்தேன் GS கடிதம் தந்தார்.
திம்பிரிகசயாவில் கொடுக்க சொன்னார் .
படிமுறை 4
திம்பிரிகசாய சென்றேன் அங்கு சொன்னார்கள் Dehiwela divisional secretariat கையெழுத்து வேனும் என்று.
படிமுறை 5
மீண்டும் தெஹிவலை சென்று கையொப்பம் வாங்கி கொண்டு போய் கொடுத்தேன் .

3 மாதங்களின் பின்னர் அம்மா
இதே வேலைக்காக நேரடியாக வெள்ளவத்தை Gs டம் request letter டன் போனேன் . அவர் சொன்னார் request letter தேவையில்லை , தான் எழுதுவது போல் ஒரு கடிதம் எழுதி தரும் படி அதில் தான் கையொப்பம் இட்டு தருவதாக. தலை சுற்றியது நான் change of address என ஒருகடிதம் சும்மா எழுதி கொடுத்தேன் 🤪 அதில் அவர் சைன் பண்ணினார்.
படிமுறை 2
தெஹிவல GS ம் போனால் தான் அந்த அம்மாவை நேரடியாக பாக்காமல் கையொப்பம் இடமுடியாது என்றார். நான் சொன்னேன் சில மாதங்களின் முன்னர் தானே அகம் வந்து வேறு ஒரு அம்மாவிற்கு life certificate கு கையொப்பம் இட்டீர்கள் அந்த அம்மா அருகில் இருந்து உங்களிடம் இதுபற்றி கதைத்த அம்மா தான். NIC ஐ பாருங்கள் என்றேன். தெஹிவலையில் தேர்தலும் பதிந்து இருக்கிறோம் என்றேன்
check பண்ணினார் . பின்னர் சொன்னார் , இல்லை இல்லை அது சரிவராது என்று நேரில் வந்து பார்த்து கடிதம் தந்தார்.
படிமுறை 3
தெஹிவல DS ன் கையொப்பம்
படிமுறை 4
திம்பிரிகசாய
அகம் அம்மா C
இன்று request letter ம் , Gs எழுதுவது போல் ஒரு கடிதம் 2 ம் கொண்டு போனேன்.  அவர் ஒரு படிவம் தந்து அதை நிறப்ப சொன்னார் பின்னர் அதில் கையொப்பம் இட்டு தந்தார்
அடுத்து தெஹிவல Gs டம் சென்றேன் என்ன விடையம் என்றார். File Transfer என்று form ஐ காட்டினேன் . Ok போய் திம்பிரிகசாயவில் கொடுங்க என்றார்
நான் நீங்கள் கடிதம் தாங்கோ தேர்தல் பதிவும் தெஹிவலையில் உள்ளது என்றேன். Request letter கேட்டார் தயாராக வைத்திருந்ததை உடனே எடுத்து கொடுத்தேன்
கையொப்பம் இட்டார் .

நானாக தெஹிவல DS ம் சென்றேன் கையொப்பம் வாங்கி 3 கடிதங்களையும் கொண்டு திம்பிரிகசாய போனால் இந்த ஒரு கடிதங்களும் தேவையில்லை அம்மாவின் file transfer lrequest letter ஒன்று போதும் என்றார் ஈஸ்வரா ஒரு வேலைக்கு என்ன procedure என்று சம்பந்தப்பட்ட ஒருவருக்கும் தெரியவில்லை.
பற்றாக்குறைக்கு திம்பிரிகசயாவில் staff meeting என்று 1 மணிநேரம் காக்க வைத்தனர் . அவர் அவர் மேசையில் ஒருவரும் இல்லை .

Contact Us