தனது சாட்டலைட்டை ஏவுகணை கொண்டு அழித்த ரஷ்யா: 1,500 துண்டுகள் விண்ணில் மிதக்கிறது. ஓட்டம் பிடித்த சர்வதேச விண் வெளி வீரர்கள்..

ரஷ்யா தன்னுடைய பழைய சாட்டலைட் ஒன்றை, புது ரக ஏவுகணை கொண்டு விண்ணில் வைத்து தாக்கி அழித்துள்ளது. அது சுமார் 1,500 பாகங்களாக பிரிந்து விண்ணில் குப்பையாக உள்ளது. ரஷ்யா ஒரே கல்லில் 2 மாங்காய் அடித்துள்ளது. தான் புதிதாக தயாரித்த ஏவுகணையின் துல்லியத்தை அது பரிசோதனை செய்து பார்த்துள்ள அதேவேளை. தேவை இல்லாத சாட்டலைட்டை அழித்தும் உள்ளது. ஆனால் இதனால் சர்வதேச விண் வெளியில் உள்ள வீரர்கள், ஓடிச் சென்று, எஸ்கேப் ஆகும் கலத்தினுள் செல்ல வேண்டிய சூழ் நிலைக்கு தள்ளப்பட்டார்கள். விண்ணில் இவ்வாறு உண்டாகும் கழிவுகள், படு வேகமாக பூமியை சூறி வருகிறது. இவற்றில் ஒன்று, சர்வதேச விண் வெளி நிலையத்தை தாக்க கூடும் என்ற அச்சம் நிலவி வருகிறது. இப்படி தான் ,,,

கடந்த செம்படம்பர் மாதம் சர்வதேச விண்வெளி நிலையத்தின் மீது விண்வெளி கழிவுகள் மோதும் சூழல் ஏற்பட்ட போது, விண்வெளி நிலையத்தில் இருந்த விண்வெளி வீரர்கள் விண்வெளி கழிவுகளுடன் மோதுவதை தவிர்க்க விண்வெளி நிலையத்தை குறிப்பிட்ட தூரத்துக்கு நகர்த்தினர். இவ்வாறு விண்வெளிக் குப்பைகளை கண்காணித்து அவற்றில் மோதாமல் இருப்பதற்காக செயற்கைக்கோள்கள் மற்றும் விண்வெளி நிலையத்தின் சுற்றுப்பாதையை அவ்வபோது மாற்றுவதே விஞ்ஞானிகளுக்கு பெரும் பணியாக உருவெடுத்துள்ளது. இதனிடையே விண்வெளியில் ஒவ்வோர் ஆண்டும், முன்னெப்போதுமில்லாத வகையில் அதிகமான செயற்கைக்கோள்கள் செலுத்தப்படுவதால் விண்வெளிக் குப்பைகள் மேலும் அதிகரித்து வருகின்றன.

இந்த நிலையில் ரஷ்யா மேற்கொண்ட ஆபத்தான ஏவுகணை சோதனையால், ரஷ்ய நாட்டின் செயற்கைக்கோள் ஒன்று வெடித்துச் சிதறி சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தியுள்ளதாக அமெரிக்கா விண்வெளி ஆய்வு மையமான நாசா குற்றம் சாட்டியது.இருப்பினும் இந்த குற்றச்சாட்டை ரஷ்யா மறுத்துள்ளது. இது குறித்து ரஷ்ய வெளியுறவுத்துறை மந்திரி செர்கெய் லாவ்ரோவ் கூறுகையில், ரஷ்ய ராணுவம் தனது பாதுகாப்பு திறன்களை வலுப்படுத்த திட்டமிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார்.

மேலும் ஏவுகணை சோதனை மூலம் செயற்கைக்கோள் தகர்க்கப்பட்டது உண்மைதான் என்றும் இதனால் மற்ற செயற்கைக்கோள்களுக்கும், சர்வதேச விண்வெளி நிலையத்திற்கும் எந்த ஆபத்தும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார். அதே சமயம் விண்வெளியில் அமைதியை சீர்குலைப்பதாக ரஷ்யா மீது அமெரிக்கா வைக்கும் குற்றச்சாட்டு ஒருதலைபட்சமானது என்றும் அவர் கூறியுள்ளார்.

Contact Us